Published:Updated:

திட்டங்களை விரைந்து நிறைவேற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை!

திட்டங்களை விரைந்து நிறைவேற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை!
திட்டங்களை விரைந்து நிறைவேற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை!

திட்டங்களை விரைந்து நிறைவேற்றுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை!

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள், தங்களது துறை சார்ந்த திட்டப் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி,  டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ''அரசு அறிவிக்கும் திட்டங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. மேலும், அந்தத் திட்டங்களின் பலன்கள் என்ன என்பதை பொதுமக்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் காலக்கெடுவை நாம் தவறவிடக் கூடாது. அதனால், எந்தவொரு திட்டத்தையும் குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மிக முக்கியமானவை. அந்தத் திட்டங்களை எக்காரணம் கொண்டும் கிடப்பில் போட்டுவிடக் கூடாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு