Published:Updated:

'விதி எண்.110 மூலமாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்க முன்வர வேண்டும்!'

'விதி எண்.110 மூலமாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்க முன்வர வேண்டும்!'
'விதி எண்.110 மூலமாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்க முன்வர வேண்டும்!'

'விதி எண்.110 மூலமாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்க முன்வர வேண்டும்!'

சென்னை: குறைந்தபட்சம் விதி எண்.110 வாயிலாகவாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆறு பேரை 'சஸ்பென்ட்' செய்து தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதே?

தமிழக அரசுக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் எனக் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில், ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து வீண் வேலையை மேற்கொள்வது என்பது, உச்ச நீதிமன்ற ஆணையைப் புறக்கணிப்பதாகவும், சட்டப்பேரவை நாகரிகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் அமைந்துவிடக் கூடும் என்று பொதுமக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

பொதுவாக நிதி நிலை அறிக்கை படிக்கும்போது, புத்தகத்திலே உள்ள வார்த்தைகளைத்தான் படிப்பார்கள். ஆனால் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையைப் படிக்கும்போது, அந்த அறிக்கையிலே இல்லாத வார்த்தைகளான, 'அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில்' என்று படித்தாரே?

அவருடைய வேதனை அவருக்கு! அப்படிப் படிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலை! வேறு ஏதேனும் சோதனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம்! அம்மா போட்டியிட்ட தொகுதியில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட கதி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் கிழமை 15-2-2016 அன்று நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டையே தவறாக அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்களே?

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் விழாவல்லவா அது? அதனால்தான் தவறாக அச்சடித்திருக்கிறார்கள். தற்போது நடைபெறுவது திருவள்ளுவர் ஆண்டு 2047 ஆகும். ஆனால் அழைப்பிதழில் 2046 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆளுநர், அமைச்சர் போன்றவர்கள் கலந்துகொள்ளும் விழாவிலேயே இந்த அடிப்படைத் தவறு நடைபெற்றுள்ளது.

ஆளுங்கட்சி உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக துணை வேந்தர்களை நியமித்தால் இப்படியெல்லாம்தான் பிழைகள் நடக்கும்! வெட்கக் கேடு! திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திலேயே இப்படித் திருகுதாள வேலையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது!

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி இடைக்கால நிதி நிலை அறிக்கையிலும் எதுவும் சொல்லப்பட வில்லையே?

அதனால்தான் நான் சில நாட்களுக்கு முன்பே கூறும்போது, போராடுகின்ற அனைத்துத் தரப்பினரும் இந்த ஆட்சியில் போராட்டம் நடத்தி எந்தப்பயனும் ஏற்படாது, எனவே அவர்கள் குடும்பத்தைப் பாதுகாத்திடும் வகையில் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்றும், அடுத்து வரும் ஆட்சியில் அவர்களின் குறைகள் கேட்கப்படும்; களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தேன்.

'விதி எண்.110 மூலமாவது அரசு ஊழியர்கள் கோரிக்கையை முதல்வர் ஏற்க முன்வர வேண்டும்!'

தற்போது வருகின்ற செய்தியில், போராடும் அரசு ஊழியர்கள் நேற்று பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து பிற்பகல் வரை எழிலக வளாகத்தில் காத்திருந்ததாகவும், ஆனால் அறிவிப்பு எதுவும் வராததால், அங்கு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்துச் சென்று குண்டுகட்டாக வேனில் ஏற்றிக் கைது செய்ததாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வந்துள்ளன.

அரசு அலுவலர்கள் அரசின் ஒரு அங்கம் என்பதை மறந்து விட்டு, தமிழக அரசு அவர்களை, ஏதோ விரோதிகள் என எண்ணி, மிகவும் அலட்சியமாகவும், பகைமையோடும் நடத்துகிறது.

அமைச்சர்கள் போராடுகின்றவர்களுடன் பேசிவிட்டு, முதல் அமைச்சரிடம் கூறுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். தினந்தோறும் காணொலிக் காட்சிகளுக்கு மட்டும் தவறாமல் நேரம் செலவிடுகின்ற முதலமைச்சர் ஜெயலலிதா, உடனடியாக சட்டப்பேரவையில் உள்ள கட்சிகளின் குழுத் தலைவர்கள் முன்னிலையில், போராடுகின்றவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அமைதிப்படுத்தவும், பிரச்னைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யவேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளுக்குப் பரிவோடு செவி மடுத்து ஏற்கக் கூடியதைக் குறைந்தபட்சம் 110வது அறிக்கை வாயிலாகவாவது அறிவித்திட முதலமைச்சர் முன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு