Published:Updated:

விவசாயிகள் தற்கொலை ஃபேஷனாகி விட்டது: பாஜக எம்பி பேச்சுக்கு பெருகும் கண்டனம்!

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஃபேஷன் என்று கூறிய அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் பெருகியுள்ளன. பாஜக எம்.பி-யின்   இந்த சர்ச்சைப் பேச்சு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக எம்.பி கோபால் ஷெட்டி, “வேலையின்மை மற்றும் வறட்சி காரணமாக எல்லா விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்வது இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தற்போது ஃபேஷன் மற்றும் டிரெண்டாகிவிட்டது.

மேலும் விவசாயிகள் குடும்பத்திற்கு ஒரு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் கொடுத்தால் அண்டை மாநில அரசுகள் ரூ.7 லட்சம் பணம் வழங்குகிறது. இதுவும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது” என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய கருத்து விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபால் ஷெட்டி கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 124 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பாஜக எம்பி இவ்வாறு பேசியிருப்பது  விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு