Election bannerElection banner
Published:Updated:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சு.சுவாமி புதிய மனு!

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உத்தரவிடக் கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில்  புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''சாலை அமைப்பது போன்ற பொதுப்பணிகளை மேற்கொள்வதற்காக மசூதிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையாகவே இருந்து வருகிறது.

ஆனால், இந்தியாவில் ஓரிடத்தில் கோயில் கட்டப்பட்டுவிட்டால் அதன் பிறகு அதில் கைவைக்கும் வழக்கம் கிடையாது. எனவே, ராமஜென்ம பூமியில் முன்பு ராமர் கோயில் இருந்தது உண்மை. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அயோத்தி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் அமர்வுக்கு இந்த மனுவை மாற்றி உத்தரவிட்டு உள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு