அணு எதிர்ப்பின் அடிப்படை... கதிர்வீச்சு!

''நமது உலகம் மதி நுட்பமற்ற திறமையையும், மனசாட்சியற்ற அதிகாரத்தையும் பெற்று இருக்கிறது.

. அணு ராட்சதர்களையும், சிறு பிள்ளைத்தனமான ஒழுக்கத்தையும் உடையது நம் உலகு!''.
- அமெரிக்க ஜெனரல் உமார் பிராட்லி

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப் பரிசோதனைகள், ஆயுதத் தயாரிப்பு போன்றவற்றின் அழிவியலைப் புரிந்துகொள்ள, உலக அணு ஆயுத அரசியலைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதனை முழுமையாக உள்வாங்க, கதிர்வீச்சு அறிவியலை அறிந்துகொள்வது அவசியம்!

கியூரி தம்பதியும், ஏனையோரும் கதிர்வீச்சு பற்றி ஆய்வு செய்த பிறகு, இயற்கையாகவே கதிர்வீச்சு இயல்புள்ள பொருட்கள் மூன்று விதக் கதிர்களை வீசுவதாகக் கண்டறிந்தனர். 1899-ம் ஆண்டு எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், யுரேனியக் கதிர்வீச்சில் ஆல்ஃபா, பீட்டா என இரு வகை இருப்பதாகச் சொன்னார். வில்லார்ட் எனும் பிரெஞ்சு அறிஞர் காமா என மூன்றாவதாக ஒன்றும் இருப்பதாகச் சொன்னார்.

ஆல்ஃபா கதிர்வீச்சு என்பது அதிக வேகத்தில் செல்லும் ஹீலியம் அணுக்களின் அணு மையங்கள். நமது தோலின் மேற்பரப்பை ஊடுருவும் சக்தி வாய்ந்த இதனை, ஒரு தாள்கொண்டு நிறுத்திவிடலாம். சுவாசிக்கும்போதோ, உணவு அல்லது தண்ணீருடனோ, ஆல்ஃபா கதிர் வீசும் பொருட்களை உட்கொண்டுவிட்டால், உடலில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு ஆபத்து நேரலாம்.

பீட்டா கதிர்வீச்சு என்பது, அதிக வேகத்தில் செல்லும் எலெக்ட்ரான்கள். ஆல்ஃபா கதிர்களைவிட, ஆழமாக ஊடுருவும் தன்மை உடையது என்றாலும் அலுமினியத் தகட்டினால் இதனை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியும்.

கண்ணுக்குத் தெரியும் ஒளிக் கதிர் போன்ற, ஃபோட்டோன்களின் அணிவகுப்பை காமா கதிர்வீச்சு என்கிறோம். காமா கதிர்களால் மனித உடலை ஊடுருவி மறு பக்கத்துக்குச் செல்ல இயலும் என்றாலும், ஒரு மீட்டர் பருமன் உள்ள கான்கிரீட்டின் வழி புகுந்து செல்லும்போது, முழுவதுமாக கிரகிக்கப்பட்டுவிடும்.

நியூட்ரான் கதிர்வீச்சு எனவும் ஒன்று உண்டு. தான் மோதும் எந்த ஓர் அணுவையும் மின்னணுவாக, அதாவது மின் சக்தி வாய்ந்த அணுவாக மாற்றும் இந்த நியூட்ரான்களால் உடல் திசுக்களைத் தாக்கி அழிக்க முடியும்.

நமது உடல் சூரிய வெளிச்சத்தின் சக்தியைக் கிரகிக்கும்போது, சூடாக உணர்கிறோம். அதுபோல, கதிர்வீச்சு சுமந்து நிற்கும் சக்தியினையும் நமது உடல் கிரகிக்கிறது. எந்த விதமான கதிர்வீச்சு, எவ்வளவு சக்தி கிரகிக்கப்பட்டு இருக்கிறது என்பதைத் தக்க உபகரணங்களால் அறிய முடியும்.

டாஸ்மாக் யுகத் தமிழன் புரிந்துகொள்ளும் ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு பாட்டில் கள் குடிக்கிறீர்கள் என்று வையுங்கள். பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. அதுவே ஒரு பாட்டில் விஸ்கி என்றால் என்னவாகும்? இதுபோல எந்த விதமான கதிர்வீச்சு என்பது முக்கியம். குவாட்டருக்கும் ஃபுல்லுக்கும் உள்ள அளவு வேறுபாடுபோல, கதிர்வீச்சின் அளவும் முக்கியமானது.

இரண்டு வழிகளில் நாம் இயற்கைக் கதிர்வீச்சுக்கு ஆளாகிறோம். ஒன்று, உடலின் வெளிப்புறம் உள்ள இயற்கையாகத் தோன்றும் கதிர்வீச்சுப் பொருட்களில் இருந்தும், விண்வெளிக் கதிர்களில் இருந்தும் எழும் கதிர்வீச்சுகள். இன்னொன்று, உணவு, நீர், காற்று ஆகியவற்றில் உள்ள கதிர்வீச்சுப் பொருட்களால் உடலின் உட்புறம் எழும் கதிர்வீச்சு. இவை அனைத்தையும் சேர்த்து, வருடம் ஒன்றுக்கு சுமார் 2 மில்லி சீவெர்ட் அளவு, அதாவது 10 எக்ஸ் ரே படம் எடுக்கும் அளவு நாம் கதிர்வீச்சுக்கு ஆளாகிறோம்.

இந்த அளவு, நாம் வாழும் இடம், வாழும் வகையைப் பொறுத்து வேறுபடலாம். கருங்கல், செங்கல், கான்கிரீட், மரம் என இதில் எதனைக்கொண்டு உங்கள் வீடு கட்டப்பட்டு இருக்கிறதோ, அதைப் பொறுத்து கதிர்வீச்சின் வகை, அளவு அமையும். உங்கள் வீடு கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் இருந்தால், விண்வெளிக் கதிர்களால் எழும் கதிர்வீச்சின் அளவு அதிகமாகும். விமானப் பயணிகள் அதிக அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகிறார்கள்.

கல்வி அறிவு பெறாத மக்கள் இடையே பேசும்போது, இந்த கதிர்வீச்சைப்பற்றி விளக்குவது கடினமான விஷயம். இதைப் பார்க்க முடியாது, கேட்க முடியாது, ருசிக்க முடியாது, நுகர முடியாது, தொட முடியாது என்று சொல்லும்போது, கதிர்வீச்சை ஓர் எமன் என்பார்கள்.

அணு சக்தி சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முதன்மையானது, இந்தக் கதிர்வீச்சுதான்! ஓர் அணுகுண்டோ அல்லது அணு உலையோ வெடித்தால், அருகே வாழும் மக்களுக்கு கடுமையான தீப்புண்கள், வயிற்றுப்போக்கு, வாந்தி, குடல்களில் ரத்தக் கசிவுபோன்ற பல அபாயகரமான பிரச்னைகள் எழும். இதனை கதிர்வீச்சு நோய் ( Radiation Illness )என்று அழைக்கிறோம். மிகவும் மோசமாக பாதிக்கப்படுவோர், உடனே மரணமடைவார்கள். அந்த பாக்கியம் கிடைக்காதவர்கள், கடும் துன்பத்துக்கு உள்ளாகி, அனலில் சிக்கிய புழு போல, துடிதுடித்துப் பரிதவித்து அணுஅணுவாகச் சாக நேரிடும்.

யுரேனியச் சுரங்கங்கள், அணு மின் நிலையங்கள், கதிர் வீச்சுக் கழிவுக் கிடங்குகள், கழிவு நீர் வெளியேற்றும் மையங்கள் ஆகியவற்றின் அருகே வசிக்கும் மக்கள், குறைந்த அளவு கதிர்வீச்சுக்கு நீண்ட நாட்கள் உள்ளாகும்போதும், விபரீதமான விளைவுகள் எழுகின்றன. கதிர்வீச்சு, உடலைத் துளைத்து திசு மற்றும் மரபணுக்களை அழிப்பதாலும், பாதிப்புக்கு உள்ளாக்குவதாலும் பல விதமான புற்று நோய்கள் வருகின்றன. இன்றைய இந்தியாவில் ஒருவருக்கு புற்று நோய் வந்து, துவக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர் தப்புவது கடினம். மிக அதிகமாகச் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், நோய் முற்றிவிட்ட நிலையில், எதுவும் செய்ய இயலாது. அவர் மரணம் அடையும்போது, அவரது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது.

குழந்தைகளும் பெண்களும்தான் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கருச்சிதைவு, குறை மாத கர்ப்பம், இறந்து பிறக்கும் குழந்தை என எத்தனையோ இன்னல்கள் எழுகின்றன. சினை முட்டைகளைச் சுமந்து நிற்கும் பெண்களின் உடல் பாதிப்புக்கு உள்ளாகும்போது, எதிர்காலத்தில் அவர்கள் வயிற்றில் உருவாகும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. உடலில் குறைகளோடும், மன வளர்ச்சி இல்லாமல் பிறக்கும் குழந்தைகளோடும் பெற்றோர் அடைகிற வேதனை விவரிக்கப்பட முடியாதது.

உலகம் முழுவதும் உள்ள அணு சக்தித் துறைகளும், அரசுகளும் கதிர்வீச்சுப் பற்றி ஒரே மாதிரியே பேசுகின்றன. 'இதனால் எழும் ஆபத்துகள் மிகக் குறைவானவை. இயற்கைக் கதிர்வீச்சோடு ஒப்பிடும் போது, அணு சக்தியால் எழும் கதிர்வீச்சு அளவு குறைவானது. ஒருவரின் சராசரி உள்வாங்கல் குறைவாகவே இருக்கிறது. புற்று நோய் என்பது பொதுவான நோய். கதிர்வீச்சோடு நேரடியாகத் தொடர்புள்ள புற்று நோய் குறைவானதே!’ என்கிறார்கள் அந்த லாபியிஸ்ட்டுகள்.

அணு சக்தி எதிர்ப்பாளர்களாகிய நாங்கள் இந்த விவாதத்தில் மாறுபடுகிறோம். கதிர்வீச்சு ஆபத்துகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இயற்கைக் கதிர்வீச்சைக்கொண்டு செயற்கைக் கதிர்வீச்சை நியாயப்படுத்துவது தவறு. நேரடி பாதிப்புக்கு உள்ளாவோரின் கதிர்வீச்சு உள்வாங்கலைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர, அனைத்து மக்களின் சராசரி உள்வாங்கலை அல்ல. கதிர்வீச்சோடு தொடர்புள்ள புற்றுநோய் குறைவானது என்று வைத்துக்கொண்டாலும் சாகடிக்கத்தானே செய்கிறது இந்த சாத்தான் என்று நாங்கள் வாதாடுகிறோம்.

அணு சக்தித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பங்கள்பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். இந்தியா முழுவதும் ஏராளமானவர்கள் நொந்து சிதைந்துகொண்டு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் பேசி இருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் இந்தியா முழுவதும் உள்ள புதிய திட்டங்கள் அனைத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்றவர் சுனில் குமார் அகர்வால். நாங்கள் இருவரும் 'எதிரிகள்’ என்றாலும், நண்பர்களாகவே பழகினோம். ஒரு சந்திப்பின்போது, என் அருகில் அமர்ந்து உணவருந்திப் பேசிக் கொண்டு இருந்தார். விடைபெறும்போது, என் தோள்களின் மீது வலக் கையைப் போட்டு அணைத்தவாறே 'ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? என்னைப் பாருங்கள். இந்தத் துறையில் இத்தனை வருடங்களாக வேலை செய்கிறேன். எனக்கு எதுவும் ஆகவில்லையே?’ என்றார். நானும் எனது இடக் கையால் அவர் இடுப்பை அணைத்தவாறு 'அப்படியே இருக்கட்டும், எனினும் கவனமாக இருங்கள்’ எனச் சொல்லி திரும்பி வந்தேன். ஓரிரு மாதங்களில் அகர்வால் மரணமடைந்த செய்தியை நாளிதழ்களில் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன். இவ்வளவு ஒரு பெரிய அதிகாரி இறந்தபோதுகூட, அணு சக்தித் துறை, அவர் ஏன் இறந்தார், எப்படி இறந்தார் என்று வாய் திறக்கவே இல்லை. 'தி ஹிந்து’ பத்திரிகை, பல உறுப்புகளின் செயலிழப்பினால் ( Multiple Organ Failure ) இறந்ததாகக் குறிப்பிட்டது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மரணத்தை பெரும்பாலும் மருத்துவ உலகம் இப்படித்தான் அழைப்பதாகச் சொல்லப்படுகிறது. நண்பர் அகர்வால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க மட்டுமே முடிந்தது என்னால்!

சி.போஸ்

தாவரவியலில் இளநிலைப் பட்டம் பெற்ற கையோடு தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இருந்து, சமூகப் பகுப்பாய்வு, விழிப்பு உணர்வு பிரசாரங்கள் செய்தவர் போஸ். குமரி மாவட்டத்தில் நடந்த மால்முடிப் போராட்டம் (1978-80), வெள்ள நிவாரணப் போராட்டம் (1992) போன்றவற்றை முன் நின்று நடத்தியவர். சுற்றுச்சூழல், பொருளாதார ஏற்றத்தாழ்வுபற்றி மக்களைச் சந்தித்துப் பேசி, சீரிய சமூக சேவை செய்யும் இந்தச் சிவப்புச் சிந்தனையாளர், துவக்கம் முதலே கூடங்குளம் அணு மின் திட்டத்தை எதிர்த்து வருகிறார்.

- அதிரும்...