Published:Updated:

காங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா!

காங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா!
காங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா!

காங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா!

மும்பை: காங்கிரசிடம் இருந்து பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 8-ம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால், இமாச்சலபிரதேச மாநிலத்தில் போட்டி நடத்துவதற்கு அம்மாநில முதல்வர் வீர்பத்ரசிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மேலும், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை எங்களால் உறுதிபடுத்த முடியாது. ராணுவத்தில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் வாழும் இந்த மண்ணில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பது, தியாகிகளின் குடும்பத்தினரை அவமதிப்பது ஆகி விடும் என்றும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதேபோல், மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட எந்தவொரு பகுதியிலும் பாகிஸ்தான் நாட்டு வீரர்களின் கிரிக்கெட் போட்டி இடம்பெற கூடாது என்று சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், ''இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இமாச்சலபிரதேசத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீர்பத்ரசிங்கை நாங்கள் வரவேற்கிறோம்.

பதன்கோட் தாக்குதல் சுவடும், ராணுவ வீரர்களின் ரத்தமும் இன்னமும் அப்படியே இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களையும், கலைஞர்களையும் தடுத்து நிறுத்தாத அரசியல்வாதிகளிடம் இருந்து பொதுமக்கள் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? மகாராஷ்டிர மாநில அதிகாரத்தில் இருப்பவர்கள் (பா.ஜ.க.), இமாச்சலபிரதேச முதல்வரான காங்கிரஸ் தலைவர் வீர்பத்ர சிங்கிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்.

அது தான் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான அஞ்சலி. பாகிஸ்தான் அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் வரவேற்பதை இப்போதாவது நிறுத்துங்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால், அது நலமானதாக இருக்கும்" என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு