Published:Updated:

பட்டாசு வெடித்ததால் கோபம்... பேசாமல் சென்ற வைகோ!

பட்டாசு வெடித்ததால் கோபம்... பேசாமல் சென்ற வைகோ!
பட்டாசு வெடித்ததால் கோபம்... பேசாமல் சென்ற வைகோ!

திருவண்ணாமலை: செங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதை நிறுத்துமாறு வைகோ கூறியும், தொண்டர்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால் ஆத்திரம் அடைந்து கோபத்துடன் பேசாமல் மேடையைவிட்டு இறங்கி சென்றார் வைகோ.

பட்டாசு வெடித்ததால் கோபம்... பேசாமல் சென்ற வைகோ!

மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ''மதுவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அரசாகிவிட்டது அ.தி.மு.க. அரசு. கணவன், மனைவி சேர்ந்து மது குடிக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது" என்று குற்றஞ்சாட்டினார்.

அதன் பின்னர் கடைசியாக மேடையில் அமர்ந்து இருந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்ற வந்தார். அப்போது, உற்சாக மிகுதியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். இதனால் வைகோவால் பேச முடியவில்லை. உடனே அவர், தொண்டர்களை பட்டாசு வெடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், அவரின் பேச்சை பொருட்படுத்தாத தொண்டர்கள் மேலும் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனால் வைகோ பேசுவதை யாராலும் கேட்க முடியவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த வைகோ, கூட்டத்தில் பேசாமல் மேடையைவிட்டு கீழே இறங்கி தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவத்தால், வைகோவின் பேச்சை கேட்பதற்காக அங்கு கூடி இருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு