Published:Updated:

'பாக்.கிற்கு ஆதரவாக முழக்கமிட்டால் தலை துண்டிக்கப்படும்!'

'பாக்.கிற்கு ஆதரவாக முழக்கமிட்டால் தலை துண்டிக்கப்படும்!'
'பாக்.கிற்கு ஆதரவாக முழக்கமிட்டால் தலை துண்டிக்கப்படும்!'

'பாக்.கிற்கு ஆதரவாக முழக்கமிட்டால் தலை துண்டிக்கப்படும்!'

கொல்கத்தா: பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாரெல்லாம் முழக்கமிடுகிறார்களோ அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில், பா.ஜ.க., மாநில தலைவராக இருந்த ராகுல் சின்ஹா மாற்றப்பட்டு திலிப் கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கட்சி தொண்டர்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது, ''பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று இங்கு முழக்கமிடுபவர்களின் தலை மேலிருந்து 6 இன்ச் வெட்டப்படும். காலங்கள் தற்போது மாற்றமடைந்து இருக்கிறது.

மேலும், தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் செயல்படும் தலைவர்கள், நடிகர்கள், பாடகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்களால் நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மொத்தமாக கூண்டோடு வங்தேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்றார்.

ஜே.என்.யு. பல்கலை கழக விவகாரம் சற்று தணிந்து வரும் நிலையில், பா.ஜ.க. தலைவரின் இந்த கருத்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு