Published:Updated:

மாணவர்களை வாழ்த்தும் கருணாநிதி, ஸ்டாலின்!

மாணவர்களை வாழ்த்தும் கருணாநிதி, ஸ்டாலின்!
மாணவர்களை வாழ்த்தும் கருணாநிதி, ஸ்டாலின்!

மாணவர்களை வாழ்த்தும் கருணாநிதி, ஸ்டாலின்!

சென்னை: 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவர்களுக்கு கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''தமிழகத்தில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கிறார்கள்.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடையும் வகையிலும் அவர்களுடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், ஆசிரியர்களும் பூரிப்புக்கொள்ளும் அளவுக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த பொதுத் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்ற எனது வேண்டுகோளை விடுத்து, அதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

மாணவர்களை வாழ்த்தும் கருணாநிதி, ஸ்டாலின்!

இதேபோல் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகின்ற மார்ச் 4-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.

அனைத்து மாணவ, மாணவிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றி பெற்று, தேசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு