ஊரெங்கும் பட்டாசு சத்தம்!

அதிசயமாக, நண்பரின் காரில் வந்து இறங்கினார் கழுகார். ஆளுயர மாலை போட்டு நாம் தந்த

. அசத்தல் வரவேற்புக்கு, 'நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ எனப்புன்னகைப் பணிவு காட்டி உற்சாகமாக உள்ளே வந்தார்..
இரண்டு சாக்லேட்டுகளை எடுத்து நம்மிடம் நீட்டினார். ''இடம் மாறி வந்துவிட்டீரோ?'' என்றோம் சிரித்தபடி!

''சரியாகத்தான் வந்திருக்கிறேன்! முதல் சாக்லேட்... உம் உழைப்புக்கு! ஜூ.வி-யின் ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ் வாசகப் பெருமக்களின் மன நிலையைத் தொடர்ந்து மிகச் சரியாகப் பிரதிபலித்து வந்த தொடர் சாதனைக்கு. பிரமிப்பூட்டிவிட்டீர் நீர்! இரண்டாம் சாக்லேட்... உம் வழியாக, தமிழக வாக்காளர்களுக்கு! பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம், தில்லுமுல்லு தகிடுதத்தத் தந்திரங்கள், இலவச ஆசை காட்டிய எத்தனையோ ஜாலங்கள், மறைமுக மிரட்டல்கள், நேரடி அச்சுறுத்தல்கள் என்று எதற்குமே கலங்காமல், ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு அவர்கள் அடித்த 'முடிவு மணி’ சாதாரணமானதா என்ன? தேர்தலுக்கு முன்பும் சரி... முடிவுக்காகக் காத்திருந்த இந்த ஒரு மாத காலத்திலும் சரி.... மர்மத் திலகங்களாக இருந்தார்கள் நம் மக்கள்! யார் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, யார் ஜெயித்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து பட்டன் அழுத்திய பெருமைக்கு உரியவர்கள் நம் மக்களாச்சே!'' - செம சல்யூட்டுடன் சொன்னார் கழுகார்!

''நெத்தியடி! சில ஊடகங்களில் ரிசல்ட்டுக்கு சில நாட்களுக்கு முன்புகூட 'தி.மு.க. பெரு வெற்றி’ என்று குழப்படி வேலைகள் நடந்தனவே..?'' என்றோம்.

''அதை விட்டுத் தள்ளும். அடடா... உம் கருத்துக் கணிப்புக்காக, ஜூ.வி. நிருபர் படைக்கு தனியாக ஒரு பூங்கொத்தை நான் கொண்டுவந்திருக்க வேண்டும்!'' என்ற கழுகாரைப் பேசவே விடாமல், எஸ்.எம்.எஸ்-கள் வந்து குவிந்துகொண்டு இருந்தன. ''மக்கள் கருத்தைப் பிரதிபலித்த காரணத்தால், வாழ்த்துகிறார்கள் வாசகர்கள். வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு இல்லாமல், நாட்டில் நடப்பது நல்லதா... கெட்டதா என்ற அடிப்படையில், தீர்க்கமான சில கருத்துகளைத் தொடர்ந்து எழுதி மக்கள் முன்வைத்து வந்தோம். அதை ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு என்று ஒரு சிலர் உள்நோக்கம் கற்பிக்கப் பார்த்தார்கள். சாதிப் பாசம் என்றும் கொச்சைப்படுத்தினார்கள். இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்... மக்கள் கருத்தே... ஜூ.வி-யின் கருத்தும் என்று!''

''அறிவாலயம், போயஸ் கார்டன் என உமது நிருபர் படையைக் களத்தில் இறக்கி, நாலா பக்கமும் துள்ளித் திரிய அனுப்பி இருப்பீர்! இந்த வெற்றியை ஓரளவு ஜெயலலிதா எதிர்பார்த்து இருந்தார் என்பதுதான் உண்மை. கொடநாடு சென்று ஓய்வெடுத்துத் திரும்பிய அவரிடம், விமான நிலையத்தில் நிருபர்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள். எதற்கும் பதில் சொல்லாத ஜெயலலிதா, '13-ம் தேதி உங்களுக்குப் பதில் சொல்வேன்’ என்று சொன்னபோது அவரது கண்களில் அத்தனை நம்பிக்கை! வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்த ஜெயலலிதா, சிறப்பு பூஜைகளை முடித்துவிட்டுக் காத்திருந்தார். தபால் ஓட்டுகளில் தி.மு.க. முன்னணி என்று வந்ததைக்கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 'ஒரு மணி நேரம் காத்திருங்கள்’ என்றார். அடுத்த அரை மணி நேரத்தில் மளமளவென்று முன்னணிச் செய்திகள் வர ஆரம்பித்ததும்... ஜெயலலிதா நிமிர்ந்து உட்கார்ந்தார். அடுத்த ஆறு மாதங்களுக்கு தான் செய்ய வேண்டிய ஆக்ஷன் பிளானைத் தயாரித்துவிட்டார் ஜெயலலிதா. இவை, இன்று நேற்று தயாரானது அல்ல. கொடநாட்டில் இரண்டு வாரங்களாக, இந்த வேலையில்தான் இருந்தார் ஜெயலலிதா!''

''என்னவாம்?''

''மிக முக்கியமானது, புதிய சட்டசபை வளாகம் சம்பந்தப்பட்டது. ஓர் ஆண்டுக்கு முன்பே, 'நான் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்துக்குப் போக மாட்டேன்’ என்று வெளிப்படையாகவே சபதம் போட்டவர் ஜெ. அடுத்து நடந்த சட்டசபைக் கூட்டத் தொடருக்கும் போகவில்லை. உடல்நிலையைக் காரணம் காட்டினார். இப்போது முதல்வராகப் பொறுப்பேற்கும்போது, அங்கு வராமல் இருக்க முடியாது. அதற்காக, கருணாநிதி கட்டிய புதிய சட்டசபைக்குள் போகவும் அவரது ஈகோ இடம் கொடுக்காது. எனவே, மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டாராம் ஜெ.''

''எத்தனையோ கோடிகளைக் கொட்டிக் கட்டிய கட்டடம் வீணா?''

''புதிய தலைமைச் செயலகத்தை 600 கோடி செலவில் கட்டுவதாக ஆரம்பித்து... 1000 கோடிக்கும் அதிகமாக அள்ளி இறைத்ததில் நிறையவே ஊழல் நடந்து இருப்பதாக நினைக்கிறாராம் ஜெயலலிதா. அநேகமாக அவர் போட இருக்கும் முதல் வழக்காகக்கூட இது இருக்கலாம். இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையே அப்ரூவராக மாற்றவும் நினைக்கிறார்கள். அடுத்தது... மின் வாரியத்துக்காக நிலக்கரி வாங்கியதில் நடந்த முறைகேடுகள். உணவுத் துறையில் வழங்கப்பட்ட பொருட்களுக்கான டெண்டர்கள் அடுத்த ஃபைலாக வருகிறது. அமைச்சர்கள் அத்தனை பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிப் போட்ட சொத்துகள், அவர்களின் பினாமிகளாக வலம் வரும் நபர்களின் ஜாதகங்கள் எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீடுகள் இதில் முக்கியமானவையாக இருக்கும். மந்திரிகளின் பி.ஏ-க்கள் சிலர் அப்ரூவராக ஆகும் காரியங்களை, அ.தி.மு.க. ஆதரவு பி.ஆர்.ஓ-க்கள் செய்து வருகிறார்கள்.''

''அடுத்த ஆறு மாதங்களுக்கு, கைது, விசாரணை, சிறை எனப் புழல் பகுதி கொந்தளிக்கும்போல இருக்கிறதே?''

''அநேகமாக ஊழல் வழக்குகள் அத்தனையும் உமாசங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர் பின்னி எடுப்பார் என்கிறார்கள். பழைய தலைமைச் செயலாளர் நாராயணனும், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜும் இந்த விஷயங்களைக் கண் கொத்திப் பாம்புகளாக இருந்து கவனிப்பார்களாம். கைதுப் படலத்தில் மதுரைதான் முக்கியமாக இருக்கும். 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அரை மணி நேரத்தில் மதுரை மீட்கப்படும்’ என்று மதுரைப் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தவர் ஜெயலலிதா. கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுரையில் நடந்த குற்றங்கள்... வழக்குகள் பதியவிடாமல் போலீஸார் தடுத்த சம்பவங்கள் எல்லாம் மிக மிக அதிகம். அழகிரியைச் சுற்றி இருக்கும் நபர்களின் பெயர்களை ஜெயலலிதாவே பட்டியல் இட்டார். அவர்கள்தான் முக்கியக் குறியாக இருக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு கோலோச்சிய உளவுத் துறை அதிகாரி ஒருவரைத் தனியாகப் பிரித்து எடுத்து, அவர்களிடம் வாங்க வேண்டிய விஷயங்களை வாங்கி, மதுரை மீட்புப் படலம் தொடங்குமாம்!''

''ஓஹோ?''

''தா.கிருஷ்ணன் கொலை வழக்கு அப்பீல் இல்லாமல் அநாதையாகக்கிடக்கிறது. அதில் சம்பந்தப்பட்ட சிலருக்கு, சென்னையின் பிரதான இடத்தில் கோடிகளைக் கொட்டும் அரசு நிலம் தாரை வார்க்கப்பட்டதாம். அதேபோல், மதுரை தினகரன் வழக்கில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் குறித்த குற்றப் பின்னணிகளும் அலசி ஆராயப்பட்டு வருகிறது. சி.பி.ஐ-யின் சென்னை மண்டலத்துக்குத் தலைமை அதிகாரியாக இருக்கும் அசோக்குமார், தனது மத்திய அரசுப் பணியில் இருந்து மாறி, மாநிலப் பதவிக்கு இன்னும் சில நாட்களில் வரப்போகிறார். அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு கொண்டுவரப் போகிறார்கள். ஜெயலலிதாவுக்குக் குடைச்சல் கொடுக்கும் துக்கையாண்டி அங்கே இருந்து தூக்கி அடிக்கப்படலாம். சி.பி.ஐ. சென்னை மண்டலப் பதவிக்கு லட்சுமி பிரசாத் ராவ் வர இருக்கிறார். அவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கம் ஆனவர். தி.மு.க. பிரமுகர்களுக்கு இனி வரும் காலங்களில் வில்லனாக இருக்கப்போவது இவர்கள்தான்!'' என்றபடி கழுகார் பறந்தார்.

அடுத்த சில நிமிஷங்களில் கழுகாரிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.

''ஜெயலலிதாவை வாழ்த்தி, டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் 'ஹலோ’ சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். 'மாநிலத்தில் மட்டும் அல்ல... மத்தியிலும் தி.மு.க-வின் செல்வாக்கைக் கரைத்தால்தான், பல விஷயங்களைத் தடங்கல் இல்லாமல் செய்ய முடியும்’ என்று ஜெ-வும் நினைக்கிறார். காங்கிரஸுடன் இணக்கமாகச் சென்று தி.மு.க-வுடனான பந்தத்தைப் பிரித்து நினைத்ததைச் சாதிக்க விரும்புகிறார் ஜெ. அவரது நினைப்புக்கு காங்கிரஸ் கரைந்து வருவதாகவே தெரிகிறது!'' என்கிறது அந்தத் தகவல்.

படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன்,

என்.விவேக், கே.கார்த்திகேயன், வீ.நாகமணி, த.கதிரவன்

எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்?

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை நோக்கி விஜயகாந்த் முன்னேறி வருவதாகவே செய்திகள் சொல்கின்றன! தேர்தலுக்கு முன்னால் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முன் பேசிய தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ''புரட்சித் தலைவி முதலமைச்சராகவும், கேப்டன் பிரதான எதிர்க் கட்சித் தலைவராகவும் அமர்வார்வார்கள்!'' என்று அன்றே சொன்னார்!

இது நிகழ்ந்தால், இத்தனை கால தி.மு.க-வின் வரலாற்றில், மிக மோசமான பின்னடைவாக அமையும். 1991-ல் ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரலையில், தி.மு.க. இரண்டே இடங்களைப் பெற்றது. அந்த சட்டமன்றத்தில்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட இல்லாமல் இருந்தது. மற்றபடி 1967 ஆட்சிக்குப் பிறகு ஆளும் கட்சியாகவோ, அல்லது எதிர்க் கட்சியாகவோ இல்லாமல் தி.மு.க. சபையில் இருந்ததே இல்லை. கடந்த தேர்தலில் தனி ஒரு மனிதராக உள்ளே சென்ற விஜய்காந்த், இந்த முறை பெரும் படையுடன் சென்று பிரதான இடத்தைப் பெற்று இருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது!

அறிவாலயம்...

காலை 8 மணி... சுமார் 200 தொண்டர்கள் மட்டும் திரண்டு இருந்தனர். செம உற்சாகம் தெரிந்தது. ஆனால், ஒரு மணி நேரத்தில் அந்தக் கூட்டம் அப்படியே கரைந்து காணாமல்போனது. பொன்.முத்துராமலிங்கம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு உசேன் ஆகிய மூவர்தான் முதலில் வந்தார்கள். பிறகு, கோபண்ணா, வசந்தி ஸ்டான்லி, பெ.வீ. கல்யாணசுந்தரம் ஆகியோர் அடுத்தடுத்து வந்து, சில நிமிடங்களில் இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்கள். இன்னொரு பக்கம், செம பூஸ்ட்டில் வந்த உடன்பிறப்புகள் கூட்டம் ஒன்று, ஜெயலலிதாவையும் சசிகலாவையும் வாயில் வந்தபடி எல்லாம் திட்டி, தங்களது கோபத்தைத் தீர்த்துக்கொண்டார்கள். ராசா, கனிமொழி, ராஜாத்தி அம்மாளையும் வசை பாடியது ஒரு கும்பல்!

லாயிட்ஸ் சாலை...

காலை 8 மணிக்கு சுமாராக இருந்த கூட்டம் சிறிது நேரத்தில் கட்டுக்கடங்காமல் கூடியது. போலீஸ் பாதுகாப்பு குறைவாகப் போடப்பட்டு இருந்ததால், தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காக்கிகள் ரொம்பவே திணறினார்கள். உற்சாக மிகுதியில் போலீஸாரிடம் மல்லுக்கட்டிய சில தொண்டர்கள், 'மாமூ சண்டைக்கு வராத... இனிமே நீ நம்மாளு’ என்று கலாய்த்தார்கள். எம்.ஜி.ஆர். சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. தண்ணீர் பந்தலில் ஆரம்பித்த உற்சாகம் நேரம் செல்லச் செல்ல மோர்ப் பந்தல், வெள்ளரி மோர்ப் பந்தல், மாங்காய் மோர்ப் பந்தல்... கடைசியாக கிர்ணிப் பழ ஜூஸ் பந்தல், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் பந்தல் எனக் களை கட்டியது!

வடிவேலு...

''ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனருங்களா?'' எனக் கலாய்ப்புக் காட்டி வயிறு குலுங்கவைத்தவர்

வடிவேலு. தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த நிலையில், அந்த ஜோக் நம் நினைவுக்கு வர... அதே பாணியில் 'புயலுக்கு’ போன் போட்டோம். 'டைமிங்’குக்குத் தக்கபடி அவர் டபாய்ப்பு காட்ட... அது அப்படியே இங்கே...

காலை 9:15

''இப்போதானே சார் ரிசல்ட் வர ஆரம்பிச்சிருக்கு. போகப்போகப் பார்ப்போம். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலேயே என்ன சொல்ல முடியும்?''

காலை 10:30

''முடிவு இந்த மாதிரி போய்க்கிட்டு இருக்கே சார்... சரி விடுங்க, நான் பிரசாரம் பண்ணியது விஜயகாந்த்தை எதிர்த்துத்தான். அ.தி.மு.க. அதிக இடங்களைப் பிடிக்கிற மாதிரித் தெரிஞ்சாலும், அந்தாளு (விஜயகாந்த்) 41 இடங்களில் குறைவான இடங்களில்தானே லீடிங் வர்றாரு... அப்போ, நம்ம பேச்சுக்கு மக்கள் மதிப்பு அளிச்சு இருக்காங்கன்னுதானே அர்த்தம்!''

காலை 11:35

''சார், முழு ரிசல்ட் வரட்டும். நான் அண்ணன் (அழகிரி) வீட்ல இருக்கேன்!''

மதியம் 12:00

''மக்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதனை மதிச்சு ஏத்துக்கிறதுதான் சரி. ஆனா, நான் அம்மாவைத் திட்டவே இல்லியே!''

குஷ்....பூ!

தேர்தல் ரிசல்ட் குறித்து குஷ்புவிடம் பேசினோம். ''கட்சியோட சாதனைகளைப் பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டியது தொண்டர்களின் கடமை. அதைத்தான் நான் தேர்தல் நேரத்தில் செய்தேன். மக்களுடைய தீர்ப்பு வேறு விதமாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!'' எனச் சொல்லி சட்டென கட் செய்தார்!

ஜாஃபர் சேட்...

13-ம் தேதி காலையில் 6.30 மணிக்கு கருணாநிதியிடம் இருந்து ஜாஃபர் சேட்டுக்கு போன்... 'எப்படிய்யா இருக்கும் ரிசல்ட்?’ எனக் கேட்க, 'நிச்சயம் 120 ஸீட்டாவது வந்திடும்!’ எனச் சொல்லி இருக்கிறார் ஜாஃபர். 'ஆரம்பத்தில் 145 ஸீட் சொன்னியேப்பா... இப்போ இழுபறியா?’ என கருணாநிதி இழுக்க, 'எப்படியும் வந்திடுவோம்!’ என மீண்டும் நம்பிக்கை வார்த்தாராம் ஜாஃபர். ஆனால், தி.மு.க-வுக்கு இறங்குமுகமான ரிசல்ட் வெளிவரத் தொடங்கியதும், ஜாஃபருக்கு முகம் வாடிவிட்டது. 'கருணாநிதியை அவர் நேரில் சந்திப்பார்!’ என கோபாலபுரத்தில் பேச்சுக் கிளம்பியது. ஆனால், ஜாஃபர் வரவே இல்லை!

ரஜினி...

தேர்தல் முடிவு வெளியாகிக்கொண்டு இருந்த பரபரப்பான நேரத்தில், ரஜினி பற்றி விபரீத வதந்தி பரவியது. ''சார், ஜாலியா டி.வி பார்த்துட்டு இருக்கார். வதந்திக்குப் பதறி வர்ற போன் கால்களுக்குப் பதில் சொல்லி மாளலே!'' என்றார்கள் ரஜினி வீட்டில். 'அ.தி.மு.க-வினரின் கொண்டாட்டத்தை அடக்க தி.மு.க-வினரே கிளப்பிவிட்ட வதந்தி!’ என்றும் பேச்சு!