Published:Updated:

ராஜ் தாக்கரே 'எரிப்பு' பேச்சு: மும்பையில் ஆட்டோவுக்கு தீவைப்பு!

Vikatan Correspondent
ராஜ் தாக்கரே 'எரிப்பு' பேச்சு: மும்பையில் ஆட்டோவுக்கு தீவைப்பு!
ராஜ் தாக்கரே 'எரிப்பு' பேச்சு: மும்பையில் ஆட்டோவுக்கு தீவைப்பு!

ராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை கொளுத்துங்கள் என்ற ராஜ்தாக்கரேவின் பேச்சை தொடர்ந்து மும்பையில், நள்ளிரவில் ஆட்டோ ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

ராஜ் தாக்கரே 'எரிப்பு' பேச்சு: மும்பையில் ஆட்டோவுக்கு தீவைப்பு!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்ட்ர நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்ரே, பாரதிய ஜனதா அரசின் செயல்பாடு காரணமாக மும்பையில்  புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதம் பேர் அயல்மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மராட்டியர் அல்லாதவர்களின் ஆட்டோக்களை கொளுத்துங்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தார்.

ராஜ் தாக்கரே 'எரிப்பு' பேச்சு: மும்பையில் ஆட்டோவுக்கு தீவைப்பு!

ராஜ் தாக்ரேவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுத்துள்ள நிலையில்,  மும்பையின் அந்தேரி பகுதியில் நேற்று  நள்ளிரவில் ஆட்டோ ஒன்றுக்கு  மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் அந்த ஆட்டோ முழுவதும் தீக்கிரையானது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.