Published:Updated:

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது- ஷாக் கொடுக்கும் ஸ்டாலின்!

Vikatan Correspondent
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது- ஷாக் கொடுக்கும் ஸ்டாலின்!
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது- ஷாக் கொடுக்கும் ஸ்டாலின்!

தேர்தலுக்கு பின்னர் திமுக ஆட்சி அமைத்தால் கூட்டணிக்கு கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
 

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடையாது- ஷாக் கொடுக்கும் ஸ்டாலின்!

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரசாரம் செய்வதற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத காரணத்தால், திமுக மீது மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் நலக் கூட்டணியை பிரிக்க திமுக முயற்சிப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றார்.

உடுமலையில் சாதிய ஆணவப் படுகொலைக்கு ஆளான சங்கர் விவகாரம் பற்றி திமுக மவுனிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இதுபற்றி போயஸ் கார்டனில் இருக்கும் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பி பதில் பெற வேண்டும் என செய்தியாளர்களிடம் சாடினார்.

மேலும், தமிழக அரசின் தவறுகளை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் பலிகாடாக ஆக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.