Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட மிரட்டல் இது!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட மிரட்டல் இது!
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட மிரட்டல் இது!

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள், அடுத்த தாக்குதல் இங்கிலாந்து வீதிகளில் தான் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் உச்சகட்ட மிரட்டல் இது!

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சில் உள்ள விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பெற்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் இருந்து எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில், "இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள நாடுகள் அனைத்தும்,  தங்களின் இருண்ட பக்கத்தை பார்ப்பார்கள் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம். மேலும் உங்களுக்கு காத்திருப்பது இன்னும் பலமானதாகவும் கசப்பானதாகவும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இங்கிலாந்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரில் உள்ள வீதிகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்கள் மற்றும் வீதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு