Published:Updated:

அ.தி.மு.க.வை. தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்கிறார் வைகோ!

சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.

சென்னை அண்ணா நகரில் இன்று செய்தியாளர்களை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ சந்தித்தார். அப்போது, மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய கருத்து பற்றி செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ''பூஜ்யம் என்று கூறியவர்கள் விஜயகாந்த் அலுவலகத்தில் தவம் கிடந்தது ஏன்?" என்றார். மேலும் தொடர்ந்தவர், ''வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே தங்கள் கூட்டணியின் குறிக்கோள். எங்கள் கூட்டணியில் சேரும்படி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மீணடும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு