Published:Updated:

'தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்!'

'தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்!'
'தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்!'

'தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்!'

திருப்பூர்:  மக்கள் நலக் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளன என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., கூறினார்.

திருப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,“ தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி, பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பாரம்பர்யத் தொழில்கள் நசிந்து கொண்டிருக்கின்றன. ஜவுளித் தொழில் சார்ந்த சாயத்தொழில் நெருக்கடியைச் சந்தித்து,  வெளி மாநிலங்களுக்கு வெளியேறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர் வேலையிழப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முறைசாராத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் தர வேண்டும், சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், காண்ட்ராக்ட் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த திமுகவும், அதிமுகவும் தொழிலாளர்களுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்துவிட்டனர்.
தமிழகத்தில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஊழலற்ற, கொள்ளையடிக்காத, வெளிப்படையான ஆட்சி அமைய வேண்டும். ஏழை, எளிய, விளிம்புநிலை மக்கள் வாழ்வு மாற்றம் காண வேண்டும். ஆணவக் கொலை இல்லாத, பாரபட்சமில்லாத, சமத்துவமான நிலை உருவாக வேண்டும். அதற்கு மக்கள் நலக்கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம்.

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் தொகுதி பங்கீட்டு உடன்பாடு கண்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த அணியின் பாய்ச்சல் வேகம் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு ஆதரவாக தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி தேர்தல் உடன்பாடு கண்டிருப்பது சந்தர்ப்பவாதம் என்கிறார் அன்புமணி.  மக்கள் நலக்கூட்டணிக்கும், தேமுகவுக்கும் ஏற்பட்டிருக்கும் உடன்பாட்டில் சிறு அளவுக்குக்கூட சந்தர்ப்பவாதம் கிடையாது.  தற்போது தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சேர்ந்திருப்பதால் பாமகவுக்கு வடக்கே சில தொகுதிகள் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது என்பதால் அன்புமணி இப்படிக் கூறுகிறார்.

'தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம்!'

மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் அறிக்கையாக சில விசயங்களைச் சொல்லியிருக்கிறார். கூட்டணி ஆட்சியில் இருவருக்கும் ஒத்துப் போகக்கூடிய விசயங்களை முன்வைப்போம். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்பட பலரும் இதை விமர்சித்திருப்பது, அவரவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றம், தோல்வியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதைப் பற்றி பேசியாக வேண்டிய கட்டாயத்தில், அரசியல் நாகரிகத்தைக் கடந்த பேச்சுக்களாக அவை இருக்கின்றன. இவை நகைப்புக்கு உரியது" என்றார்.

ச.ஜெ.ரவி

 
 

அடுத்த கட்டுரைக்கு