Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

சகாதேவன், சத்தியமங்கலம் 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவுக்கு சோனியா ஏன் போன் செய்தார்?

58 காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான்! 

கூத்தாண்டி, திருநெல்வேலி

கழுகார் பதில்கள்

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பற்றி?

கழுகார் பதில்கள்

கருணாநிதியின் எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்தியதைத் தவிர, வேறு ஒரு பாவமும் செய்யாத

##~##
பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. ஒரு பக்கச் சார்பு இருந்தாலும்,  அரசியல் விமர்சனக் கட்டுரை எப்படிப்பட்ட தரவுகளைக்கொண்டதாக அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுப்பவை அவரது கட்டுரைகள். ஒரு நிருபர் எப்படி எழுத வேண்டும் என்பதை மட்டுமல்ல, பொது வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ளவும் வேண்டும் என்பதற்கு உதாரணம் அவரது வாழ்க்கை.

நல்ல உடல் நலத்துடன், இன்னும் இன்னும் அவர் பணி தொடர வாழ்த்துகிறேன். ஆனால், இனியாவது தி.மு.க. திருந்துவதற்காக... அவரது எழுதுகோல் நிமிர வேண்டும்!

எஸ்.தியாகராஜன், சின்னசொக்கிகுளம்

கழுகார் பதில்கள்

இலங்கைக்கு ஏன் இந்தியா பயப்படுகிறது?

இந்தியா பயப்படுவது இலங்கையைப் பார்த்து அல்ல. அதற்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் சீனாவைப் பார்த்து. நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சீனாவின் குடைச்சல் சகிக்க முடியாததாகவே தொடர்கிறது. அப்படிப்பட்ட நாடு, முழுமையாக இலங்கைக்குள் வந்து உட்கார்ந்தால் என்னாவது என்பதுதான் இந்தியாவின் பயம். அதற்காக, இலங்கை செய்வதற்கு எல்லாம் இந்தியா தலையாட்டினால், அந்த நாட்டுக்குப் பக்கத்துக் கூண்டில் நிற்க வேண்டியது​தான்! 

பொன்னாபுரம் ப.சிவகுமார்பிரபு, திருப்பூர்-6

கழுகார் பதில்கள்

தியாகத்தில் பெரிய தியாகம் எது?

'நீ இதுவரை சேகரித்துவைத்து இருக்கும் புண்ணியம் அனைத்தையும் தா!’ என்று கண்ணன் கேட்டபோது, கர்ணன் தந்தது தியாகம். 'இதைத் தருவதன் மூலமாக ஒரு புண்ணியம் கிடைக்குமல்லவா, அதையும் நீயே வைத்துக்கொள்!’ என்று கர்ணன் சொல்வது  எல்லாவற்றையும் மிஞ்சிய தியாகம்.

எச்.மோகன், மன்னார்குடி

கழுகார் பதில்கள்

மேற்கு வங்கத்தில் வீசிய மம்தா அலை - தமிழகத்தில் சுழன்ற ஜெயலலிதா ஒப்பிடுங்களேன்!

34 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கட்சியின் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தியது மம்தா அலை. ஆனால், இங்கு 5 ஆண்டு ஆட்சியைத்தான் கவிழ்த்தார் ஜெ.

இங்கு வலுவான கூட்டணி ஜெயலலிதாவுக்கு வாய்த்து இருந்தது. ஆனால், மம்தாவுக்கு பலவீனமான காங்கிரஸ் கட்சி மட்டுமே பக்க பலமாக இருந்தது.

கருணாநிதியைப்போலவே இலவச அறிவிப்புகளை அள்ளி வழங்கினார் ஜெ. ஆனால், அம்மாதிரியான எந்தக் கவர்ச்சி வாக்குறுதிகளும் மம்தாவிடம் இருந்து வரவில்லை.

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதா... ராணி! ஆனால், எந்த நிலையிலும், மம்தா... சாதாரணத் தோழி!

 கே.புஷ்பா, சேலம் கொளத்தூர்

கழுகார் பதில்கள்

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் ஓடிப்போன ஃபைனான்ஸ் கம்பெனிகளில் டெபாஸிட் செய்தவர்களுக்கு ஓரளவாவது பணம் கிடைத்ததா?

இல்லை! சிட்டுக்குருவியைப்போலச் சிறுகச் சேமித்த பெரும்பாலான மக்கள், தங்களது உயிரைவிட்டுச் செத்துப் போனதுதான் மிச்சம். ஆனால், ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தி சிறைக்குப் போனவர்கள் வெளியில் வந்து சுகமாகவே இருக்கிறார்கள். அதைவிட 'பொருளாதாரக் குற்றப் பிரிவு’ இன்னும் வளமாக இருக்கிறது! 

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்( நாமக்கல்)

கழுகார் பதில்கள்

தி.மு.க-வினரைத் தவிர, தி.மு.க-வுக்கு யாருமே ஓட்டுப் போடவில்லைதானே?

தி.மு.க. தொண்டர்கள் பலரே தி.மு.க-வுக்கு வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மை!

 கா.இராகவேந்திரன், ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்

கண்ணில் காண்பதைக்கூட சிலர் நம்ப மறுக்கிறார்களே..?

கழுகார் பதில்கள்

கண்ணில் காண்பது பொய்யாகவும் இருக்கலாம் என்பதற்கு விஞ்ஞான விளக்கம் தருகிறார் ஸ்டீஃபன் ஹாஃக்கிங். 'இரவில் நாம் பார்க்கும் நட்சத்திரங்களில் பல, சுமார் 3,000 ஒளி ஆண்டுகளைக் கடந்து வந்தவை. நாம் பார்க்கும் நேரம், அந்த நட்சத்திரம் திசை மாறியோ, அழிந்தோகூட இருக்கலாம்’ என்கிறார். சுமார் 49 வருடங்களாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, வாய் பேசவும், நகரவும் இயலாமல் மரணத்துடன் போராடும் ஸ்டீஃபனின் கருத்துகள் சுவாரஸ்யமானவை..

** இந்தப் பிரபஞ்சம் எந்தக் காரணத்துக்காகவும் படைக்கப்பட்டது அல்ல, தானாகவே உருவானது.

** கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றால், அவரும் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் படைத்திருக்க வேண்டும்..

** மனித குலம் பூமியில் விரைவில் முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால், அதற்குள் அடுத்த கிரகத்தில் வாழப் பழகிவிடுவான்.

** மனித மூளையானது கம்ப்யூட்டரைப்போன்றது. செயல் இழந்துவிட்டால், அவ்வளவுதான். மறுபிறவி, முற்பிறவி கிடையாது. 

எல்.உக்கிரபாண்டியன், மதுரை_2

கழுகார் பதில்கள்

பாவம், பேராசிரியர் அன்பழகன் தோற்றுப்போய்விட்டாரே?

முகம் மாறும் முன் சொந்தக்காரர்கள் வீட்டில் இருந்து போய்விட வேண்டும் என்பார்கள். அரசியலிலும் அப்படித்தான். மரியாதை குறைவதற்கு முன்னால் ஓய்வுக்குச் சென்றுவிட வேண்டும். எல்லாம் அறிந்த அன்பழகன், இதை உணராமல் போனது அவரது தவறு!

அன்பழகன் இந்தத் தேர்தலில் நின்றிருக்கவே கூடாது. கடந்த முறை, துறைமுகத்தில் 500-க்கும் குறைவான வாக்குகளில் வென்றது, ஜனநாயக தேவதை அவருக்குக் காட்டிய ரெட் சிக்னல். அது புரியாமல், அன்பழகன் தேர்தலில் நின்றார்; தோற்றார். வில்லிவாக்கத்தில் அவர் வென்று இருந்தால்தான் ஆச்சர்யம்! 

காசிநாதன், ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்

என்னதான் சி.பி.ஐ-யை வைத்து விசாரணை செய்தாலும்,

கழுகார் பதில்கள்

1.76 லட்சம் கோடி இந்தியாவுக்குத் திரும்பவும் கிடைத்துவிடப்போகிறதா என்ன?

இல்லைதான்! மத்தியிலும் மாநிலத்திலும் தனது கட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்ற மமதையில்... கட்சித் தலைமையும், தலைமையின் குடும்பமும் தன்னை எதுவும் கேள்வி கேட்காது என்ற தைரியத்தில், பொறுப்பற்ற முறையில் 'மிக மிக விளையாட்டுத்தனமாக’ச் செய்து முடிக்கப்பட்ட மாபெரும் ஊழல் ஸ்பெக்ட்ரம். நேர்மை தவறுமானால், அதற்கான தண்டனையை அடைந்தே ஆகவேண்டும் என்பதை நிரூபிக்க சி.பி.ஐ. விசாரணை பயன்படும்.

கழுகார் பதில்கள்

1.76 லட்சம் கோடி பணத்தைவிட இதுதான் முக்கியமானது!

 கந்தன், சாத்தூர்

கழுகார் பதில்கள்

அம்மாவின் அமைச்சரவை எப்பூடி?

'எழுவர் அல்லது எண்மர் கொண்ட அமைச்சரவையை அரசன் துணைகொள்ள வேண்டும்’ என்கிறது மனு தர்மம். 'அரசனை இடித்துரைக்கும் ஆற்றல் அமைச்சர்களுக்குத் தேவை’ என்கிறது திருக்குறள். 'தனக்கென்று வாரிசு இல்லாத நேர்மையாளர்கள் அமைச்சர்களாக இருக்க வேண்டும்’ என்கிறது மகாபாரதம். இப்போது சொல்லுங்கள், அம்மாவின் அமைச்சரவை எப்படி..? 

தங்கவேல், போடி

கழுகார் பதில்கள்

அம்மா பதவி ஏற்பு விழாவில், சின்ன அம்மா குடும்பத்தினரைக் காணவில்லையே?

சசிகலா குடும்பத்தினர் யாரும் பதவி ஏற்பு விழாவுக்கு வர வேண்டாம் என்று ஜெயலலிதா கறாராகச் சொல்லிவிட்டார். 'சசிகலா மட்டும் வந்தால் போதும்... மற்றவர்கள் ஜெயா டி.வி-யில் பார்க்கலாம்’ என்று அவர் சொன்னதில் சிலருக்கு வருத்தம்தான். ஆனால், அம்மா கட்டளை, அவர்களைப் பொறுத்த வரையில் ஆண்டவன் கட்டளை!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism