Published:Updated:

இயற்கைப் புரட்சி புரியட்டும், புதிய அரசு!

இயற்கைப் புரட்சி புரியட்டும், புதிய அரசு!

இயற்கைப் புரட்சி புரியட்டும், புதிய அரசு!

இயற்கைப் புரட்சி புரியட்டும், புதிய அரசு!

Published:Updated:
இயற்கைப் புரட்சி புரியட்டும்,  புதிய அரசு!

'ஒவ்வொரு 10 கி.மீ. சாலை விரிவாக்கம் செய்யும்​போதும், 2,000 மரங்கள் அழிக்கப்படுகின்றன!’ என்று அதிர்ச்சி அளிக்கிறது ஓர் ஆய்வு. அதே ஆய்வு, 'உலகில் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்றும், இந்தியாவில் 40 சதவிகிதக் குழந்தைகள் போதிய உணவு இன்மை மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றும் சொல்கிறது.

நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் பஞ்சத்தால் தவிக்கக் காரணம், தண்ணீரை முறையற்ற வகையில் பயன்படுத்துவதே. அதனால் இயற்கை வளங்களும், நம் விளைநிலங்களும் அழிந்து வருகின்​றன. செடிகளும், மரங்களும் அழிவதால், ஆண்டுதோறும் மழைப் பொழிவு குறைகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்காகக் கூறுபோட்டு விற்கப்படுவதால், மனிதர்கள் நகரங்களை நோக்கி நடை போடுகிறார்கள். இதனால் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைகிறது. அதிக விளைச்​சலுக்கு ஆசைப்பட்டு, தவறான விதைகள், உரங்கள் போட்டு விவ​சாயம் செய்யப்படுகிறது. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்கள், இப்போது அதை எதிர்த்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

ஜெயலலிதா, தனது முந்தைய ஆட்சியில் மழை நீர் சேகரிப்பு என்ற அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதை மீண்டும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், 'ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

  நாடே பசுமையாகத் தெரியும் வண்ணம், இன்னொரு பசுமைப் புரட்சி வர வேண்டும். இல்லையேல், அழிவை நோக்கிச் செல்லும் மனித குலத்துக்கு வாய்க்கரிசி போடக்கூட தானியங்கள் இல்லாமல் போகும்!

- இரா.மணிவேல், மஞ்சப்புத்தூர்.

இயற்கைப் புரட்சி புரியட்டும்,  புதிய அரசு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism