Published:Updated:

ஜெ. வெற்றிக்கு நாக்கை அறுத்த சரிதா!

அம்மாவுக்காக உசுரையும் குடுப்பேன்!

ஜெ. வெற்றிக்கு நாக்கை அறுத்த சரிதா!

அம்மாவுக்காக உசுரையும் குடுப்பேன்!

Published:Updated:
##~##

'ஜெயித்தால் மொட்டை போடுவேன்... அலகு குத்திக் காவடி எடுப்பேன்.’ என்று நேர்த்திக்கடன் வைப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஜெய​லலிதா முதல்வர் ஆனதற்காக, தன் நாக்கையே அறுத்து உண்டியலில் போட்டுப் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் சரிதா! 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கோடிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்தவாட்டி அம்மாதான் முதலமைச்சரா வரணும்னு வீரபாண்டி கௌமாரியம்மனுக்கு நான் ஒரு நேர்த்திக்கடன் வெச்சிருக்கேன்...'' என்று ஊருக்குள் சொல்லியபடி இருந்தாராம். மே 11-ம் தேதி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் கடை போடுவதற்காக கணவர் பக்ருதீனுடன் சரிதாவும் வீரபாண்டிக்குப் போனார். 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, 'அம்மாதான் ஆட்சிக்கு

ஜெ. வெற்றிக்கு நாக்கை அறுத்த சரிதா!

வரப்போகிறார்..’ என்று பேச்சு அடிபட்டது. அதைக் கேட்ட சரிதா, ஒரு பிளேடு வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடந்து அம்மன் சந்நிதிக்குப் போனார். ''புரட்சித் தலைவி வாழ்க'' என்று கத்தியபடியே தனது நாக்கை இழுத்துவைத்து அறுத்து அருகில் இருந்த உண்டியலில் போட்டுவிட்டாராம்.

இதைப் பார்த்தவர்கள் வெலவெலத்துப் போய் நிற்க... காவலுக்கு நின்ற போலீஸார் '108’ ஆம்புலன்ஸை வரவழைத்து சரிதாவை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவரை மதுரை அரசு மருத்துவ​மனைக்கு அனுப்பினார்கள். இந்த விஷயத்தை அறிந்த ஜெயலலிதா, உடனே சரிதாவின் பின்னணியை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார். இப்போது, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சரிதா​வை சேர்த்து இருக்கிறார்கள்.

சரிதாவிடம் பேசினோம். நாக்கு துண்டான நிலையிலும் குழறிக் குழறிப் பேசியவர், ''அம்மாவுக்காக உசுரையும் குடுப்பேன் சார்...'' என்றார்.

''ஜெயலலிதாவிடம் ஏதாவது உதவி எதிர்பார்க்​கிறீர்களா?''

''ஐயய்யோ... எந்த உதவியை எதிர்பார்த்தும் இப்பிடிச் செய்யலை சார். அம்மா மேல் உள்ள பிரியத்தாலதான்! ஒரே ஒரு தடவை அவங்களை நேர்ல பாத்துட்டேன்னா போதும்... செத்தாலும் மோட்சம் போயி சேர்ந்துருவேன்!'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

ஜெ. வெற்றிக்கு நாக்கை அறுத்த சரிதா!

அரசியல் தலைவர்களுக்காக தங்களை வருத்திக்​கொண்ட, உயிரையே மாய்த்துக்​கொண்டவர்​களின் குடும்பங்கள் தங்களின் முகவரியைத் தொலைத்துவிட்டு நிற்கையில், சரிதாவின் பெயரை மட்டும் சரித்திரத்திலா எழுதப்போகிறார்கள்?

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,

எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism