Published:Updated:

பா.ம.க. 3வது வேட்பாளர் பட்டியல்: பென்னாகரத்தில் அன்புமணி, மேட்டூரில் ஜி.கே.மணி போட்டி!

பா.ம.க. 3வது வேட்பாளர் பட்டியல்: பென்னாகரத்தில் அன்புமணி, மேட்டூரில் ஜி.கே.மணி போட்டி!
பா.ம.க. 3வது வேட்பாளர் பட்டியல்: பென்னாகரத்தில் அன்புமணி, மேட்டூரில் ஜி.கே.மணி போட்டி!

சென்னை: பா.ம.க.வின் 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸும், மேட்டூர் தொகுதியில் ஜி.கே.மணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பா.ம.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. போட்டியிடுகிறது. பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 117 பேர் கொண்ட இரு வேட்பாளர் பட்டியல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, 90 வேட்பாளர்கள் கொண்ட மூன்றாவது பட்டியல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்படுகிறது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.