Published:Updated:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை!

விழுப்புரம்; வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர்  பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் அவரது மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார். விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 5 வருடங்களாக நடந்துவந்தது.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை இன்று நீதிமன்றம் விடுதலை செய்தது. விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த தீர்ப்பினை அளித்தார்.

பொன்முடி விடுதலையானதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

- தே.சிலம்பரசன்

அடுத்த கட்டுரைக்கு