Published:Updated:

மோட்டார் சைக்கிளில் பணம் பட்டுவாடா! அடுத்த அலேக் டெக்னிக்

மோட்டார் சைக்கிளில் பணம் பட்டுவாடா!  அடுத்த அலேக் டெக்னிக்
மோட்டார் சைக்கிளில் பணம் பட்டுவாடா! அடுத்த அலேக் டெக்னிக்

மோட்டார் சைக்கிளில் பணம் பட்டுவாடா! அடுத்த அலேக் டெக்னிக்

மோட்டார் சைக்கிளில் பணம் பட்டுவாடா!  அடுத்த அலேக் டெக்னிக்

தேர்தல்  வந்து விட்டால் நல்லது, கெட்டது என்று இரண்டையுமே பொதுமக்கள் சந்திப்பார்கள்.  சுவரெழுத்துகள்,  போஸ்டர்கள் நாட்டின் அத்தனை பகுதிகளையும் மூடிக் கொள்ள ஆரம்பித்து விடும்.   காதைக் கிழிக்கும் ஒலி பெருக்கிகளின் அலறல் முதியோரின் உடல் நலத்தையும், மாணவர்களின் படிப்பையும் பாழாக்கி வைக்கும்.

இதெல்லாம் நடந்தால் மட்டுமே நாட்டில் தேர்தல் வந்ததாக அர்த்தம் ஆகிவிடாது. பணப்பட்டுவாடாவும் நடக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலுக்கான முழு வடிவமும் கண்ணுக்குத் தெரியவரும்.
பணம், நகைகள், பட்டுப் புடவைகள், மது பானங்களை ஆம்புலன்ஸ்களில் கொண்டு போனால்  மிகவும் பாதுகாப்பாக போய்ச் சேர்ந்து விடும், யாரும் சோதனையிட மாட்டார்கள் என்ற எண்ணத்தால் ஆம்புலன்ஸைப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டினை திமுக உள்ளிட்ட அத்தனை எதிர்க் கட்சிகளும் சொல்லத் தொடங்கின.

அப்படி சொல்லிய வேளையில்தான் கரூரில் பட்டுவாடா பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்று  அரசு அதிகாரிகளிடம் சிக்கியது. அங்கிருந்த கிடங்கில் கட்டுக் கட்டாக பணமூட்டைகள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற காரணத்தால், கிருஷ்ணகிரியில்  உள்ள தனியார் பள்ளி ஒன்றைப் பயன்படுத்தி, அங்கேயும் கோடிக் கணக்கில் பணத்தை இதேபோல் பதுக்கி  வைத்திருந்தனர்.

பணத்தை எப்படிப் பதுக்கினாலும் அது வெளியில் தெரிந்து விடுகிற நிலையால் பணத்தைப் பதுக்கும் கட்சி அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.

' வருமான வரித்துறையினர், வெளிமாநிலத் தேர்தல் பார்வையாளர்கள்தான் ஒவ்வொரு சோதனையையும் திறம்பட செய்து பதுக்கல் பணம், நகைகளை மீட்டு வருகிறார்கள் ...'' என்ற பாராட்டையும், தமிழக தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக செயல்படுகிறது என்ற குற்றச் சாட்டையும், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகாராக அளிக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

நாடு முழுவதும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை ஏரியா வாரியாக மின்தடையை செயற்கையாக உருவாக்கிக் கொடுத்துவிட்டு பணப் பட்டுவாடா செய்கிறார்கள் என்பது கடந்த இரண்டு நாட்களாக அரசியல் தலைவர்களின் முக்கிய குற்றச் சாட்டாக இருக்கிறது.

கார், வேன், பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் போன்ற வேக வாகனங்கள், மிதமாக பயணிக்கும் மாட்டு வண்டிகள் போன்றவைகள் சோதனைச் சாவடிகளில் நிற்கவைத்து  ஆய்வு செய்யப்படாமல் போகவே முடியாது என்பதே நிலை.

இந்த சோதனையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மிகவும் சீரியசாக மேற்கொண்டு வரும் வேளையில்,  எதிர்க்கட்சியினர் சார்பில்  மீண்டும் புகார்கள் போயுள்ளது.

அந்தப் புகாரில், ''மோட்டார் சைக்கிள்களில் வைத்து லட்சக் கணக்கில் ஒவ்வொரு தொகுதியிலும் பக்கத்துப் பக்கத்து ஏரியாக்களுக்கு பணம்  சாதாரணமாக டிராவல் ஆகிறது. 20 மோட்டார் சைக்கிள்கள் அப்படி ரூட்டில் சுற்றினாலே அது கோடியைக் கிராஸ் பண்ணி விடும். கொஞ்சம் சீரியசாக இதைக் கவனியுங்கள்... நாங்கள் உங்களைத்தான் மலைபோல நம்புகிறோம் " என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.

புகார்கள் போயிருப்பது தேர்தல் ஆணையத்துக்கு அல்ல, வருமான வரித்துறையினருக்கு என்பதுதான் இப்போது புது சர்ச்சையை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஒருபக்கம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பறக்கும் படையினர், போலீசார், பதுக்கல் பணங்களை வேட்டையாடி வருகின்றனர்.

சமீப நாட்களாக, தேர்தல் ஆணையம்  பண மூட்டைகளை தேடும்  இடங்களில் எல்லாம் சொல்லி வைத்தது போல் வருமான வரித்துறையினரும்  அங்கே திடீரென ஆஜராகி 'கோல்' அடித்து வருவது எதிர்க்கட்சிகள் போட்டுக் கொடுத்த  ரூட்டில்தான் என்ற தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது.

'மோட்டார் சைக்கிள் மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் கொண்டு செல்லப்படுகிறது' என்ற புது ரூட்டில் ரெய்டு அடிக்க வருமான வரித்துறை மட்டுமே களத்தில் இருக்கிறது என்ற தகவலால், ' எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் இப்படி செய்வதா?' என்ற கேள்வியுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கோபத்தில் மூழ்கியுள்ளனர் என்கின்றனர்.

இதனால், துறை ரீதியிலான ' மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பேச்சு எழுந்துள்ளது .

-ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு