Published:Updated:

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!
ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!

சென்னை: அதிமுக சார்பில் தமிழகம் முழுக்க பல்வேறு சர்ச்சைகளுடன் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்துவரும் நிலையில்,அக்கட்சியின் அதிகாரப்பூர்வ 'ட்விட்டர்' சமூக வலைத்தளத்தில் போட்டோ தில்லுமுல்லு  நடந்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதப்பொருளாகியிருக்கிறது.

தமிழகம் முழுக்க சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர்,  யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரம்  செய்துவருகின்றனர். திமுக, அதிமுக, தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி,பாஜக கூட்டணி,பாமக என்று அனைத்துக்கட்சிகளும் பிரத்யேக ஐ.டி. டீம் ஏற்பாடு செய்து,  இரவுபகலாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றன. அத்தோடு வாட்ஸ் அப் பிரசாரமும்,செல்போன் அழைப்பு பிரசாரமும் வேகமெடுத்துள்ளன.

இந்நிலையில்,இரு நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் இயங்கிவரும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு, கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகளை  பட்டியலிட்டு 'போட்டோ ஷாப்' படங்களை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டரில் அதிமுக தில்லுமுல்லு!

அதில் ஒரு படத்தில்  தமிழக விவசாயிகள் கடந்த 2006-2011 ஆண்டுகளில் நடந்த  திமுக  ஆட்சியில், எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தனர் என்றும், தற்போதைய அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பெற்றுள்ள பலன்கள் ஏராளம் என்றும் ஆங்கில வாசகங்கள் உள்ள போட்டோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

See Also : அலறவிடும் அ.தி.மு.க. ஐ.டி. விங்!

அதில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் புகைப்படம் வேறு ஒரு ஆங்கில இதழில் வெளிவந்த புகைப்படம் என்றும், அது  வேற்று மாநில விவசாயிகள் இருக்கும் புகைப்படம் என்றும் ஆதாரங்களோடு பதிவிட்டு இணையதளவாசிகள்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு