Published:Updated:

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

Vikatan Correspondent
ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்
ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்
ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தொண்டர்கள் புடைசூழ தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தொகுதிகள் கலகலத்து போனது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல்நாள் 82 பேர் வேட்பு மனு கொடுத்தனர். 25ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட 779 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மூன்றாம் நாளான நேற்று 191 பேர் வேட்பு மனுக்கள் கொடுத்தனர். இதன்மூலம் முதல் மூன்று நாட்களில் 1052 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய 29 ம் தேதி கடைசி நாளாகும். எனவே மனுதாக்கலுக்கு இன்னும் இரு நாட்களே காலஅவகாசம் உள்ளது.

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அயனாவரத்தில் உள்ள திரு.வி.க நகர் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு தொண்டர்கள் புடைசூழ இன்று வந்தார். அங்கு அவர் தேர்தல் அதிகாரி கார்த்திகாவிடம் வேட்பு மனுவை அளித்தார். மு.க.ஸ்டாலினின் வேட்பு மனுவை கிரிராஜன் முன் மொழிந்தார்.

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உளுந்தூர் பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி முகுந்தனிடம் தாக்கல் செய்தார்.

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருமாவளவனின் மாற்று வேட்பாளராக காட்டுமன்னார் கோவில் தொகுதி செயலாளர் மணவாளன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " காட்டுமன்னார் கோவிலில் நான் வெற்றி பெறுவேன். தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டாணி- த.மா.கா  வெற்றி பெறும்.  நாங்கள் கூட்டணி ஆட்சி அமைப்போம்" என்றார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவியும் இன்று மனு தாக்கல் செய்தனர்.

ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்! கலகல விவரங்கள்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சைதாப்பேட்டையில் போட்டியிடும் முன்னாள் மேயர் மா.சுப்பிமணியன், சைதாப்பேட்டை வட்டாட்சியர் அலுலவலகத்தில், தேர்தல் அலுவலர் பொற்கொடியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா,  ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ராமபிரதீபனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

படங்கள்: குமரகுருபரன், சிலம்பரசன்