Published:Updated:

பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Vikatan Correspondent
பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!
பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

கோவை: பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவருமானவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் டாக்டர்.மகேந்திரன். இவர் பொள்ளாச்சி சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜெயராமனின் உறவினர் என்று கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமான குதிரைப்பண்ணை, பொள்ளாச்சி நடுப்புணி ரோட்டில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட உயர்ரக குதிரைகளை மகேந்திரன் வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே மகேந்திரனின் குதிரைப்பண்ணையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நேற்று (26-ம் தேதி) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வருமானவரித்துறை துணை ஆணையர் ராணி காஞ்சனா தலைமையிலான அதிகாரிகளும், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் இன்று (27-ம் தேதி) காலை 11 மணி முதல் குதிரைப்பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 6.30 மணி வரை நடந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். சோதனையை முடித்து கிளம்பிய அதிகாரிகள், பணம், பொருள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு சென்றனர். சோதனை குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை.

சோதனை குறித்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று கூறி, செல்வராஜ் தலைமையிலான தி.மு.க.வினர் நடுப்புணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ச.ஜெ.ரவி