Published:Updated:

தி.மு.க. எங்கள் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டது! -அச்சச்சோ அன்புமணி

தி.மு.க. எங்கள் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டது! -அச்சச்சோ அன்புமணி
தி.மு.க. எங்கள் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டது! -அச்சச்சோ அன்புமணி

தி.மு.க. எங்கள் தேர்தல் அறிக்கையை திருடிவிட்டது! -அச்சச்சோ அன்புமணி

சென்னை: 66 ஆண்டு கால வரலாறு கொண்ட தி.மு.க., எங்களது தேர்தல் அறிக்கையை திருடி வெளியிட்டுள்ளது என்று பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தனது பிரசாரத்தில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ''பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு குறித்து நான் முதல் கையெழுத்து போடுவேன்.

66 ஆண்டு கால வரலாறு கொண்ட தி.மு.க.,  எங்களது தேர்தல் அறிக்கையை திருடி வெளியிட்டுள்ளது. தி.மு.க.வுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அதேபோல் காங்கிரஸ். பா.ஜ.க. கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

தங்களது சுயலாபத்துக்காக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து, பல லட்சம் பேரின் உயிர் போவதற்கு காரணமாக உள்ளனர். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உறவினர்கள் மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக இருவரும் மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர். மதுவிலக்கு குறித்து பேச இருவருக்கும் அருகதை இல்லை.

அதுமட்டுமல்லாமல் தொழில் துறையில் 26-வது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் இடத்துக்கு கொண்டு வருவோம். பா.ம.க. ஆட்சி அமைந்ததும் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம். வேளாண் துறையை மேம்படுத்த 3 சிறப்பு அமைச்சகங்களை உருவாக்குவோம். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் விதத்தில் அரசாணை வெளியிடுவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு