Published:Updated:

லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!

லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!

லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!

சென்னை: 'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால் லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த குறுஞ்செய்தியில், 'இந்த தேர்தலில் இருந்து நீ வாபஸ் வாங்கவில்லை என்றால் உன் கார் மீது லாரி ஏற்றி உன்னை கொலை செய்துவிடுவேன். எங்க அம்மா வாழ்க' என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனுவை திரும்பப் பெறாவிட்டால், லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்திரராஜன் கூறும்போது, ''வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் திரும்ப பெறும் நாள் இன்று. மாலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் வாங்க சொல்லி எனக்கு மிரட்டல் விட்டுள்ளார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழில் எழுதி இருக்கும் அவர்கள் தமிழை கொலை செய்து இருக்கிறார்கள். அதில், ‘அம்மா வாழ்க’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்காக ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. திசை திருப்புவதற்காக கூட குறிப்பிட்டு இருக்கலாம்.

ஆனால், இந்த நடைமுறை தவறு. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். மற்ற வேட்பாளர்களும் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படி குறுஞ்செய்திகள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டால் அவர்கள் வாக்களிக்க வருவது தடைபடும். எனவே அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இரவில் பிரசாரத்தை முடித்துவிட்டு,  11 மணிக்கு மேல் பார்களில் சென்று மதுகுடிக்க டோக்கன் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக விரோத செயல்களின் பிறப்பிடமே மதுக்கூடங்கள்தான். அப்படி இருக்கும்போது இரவு 11 மணிக்கு மேல் பார்களை திறந்து மதுவிற்பனை செய்வது தேர்தல் நேரத்தில் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். எனவே தேர்தல் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு