Published:Updated:

மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?

மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?
மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?

மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?

மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும் வடமாநில தலைவர்களின் பேச்சுக்கு, எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால், மோடி பொதுக் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க அதிரடி வியூகத்தில் இறங்கியுள்ளது தமிழக பா.ஜ.க.

தமிழக சட்டமன்ற  தேர்தலில் 189 தொகுதிகளில் தனித்துக் களமிறங்குகிறது பாரதிய ஜனதா கட்சி. மாநிலத் தலைவர் தமிழிசை விருகம்பாக்கத்திலும், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தி.நகரிலும், மாநில பொதுச் செயலாளர் வானதி, கோவை தெற்கிலும் களமிறங்குகின்றனர். நட்சத்திர வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றாலும், திராவிடக் கட்சிகளின் பிரசாரத்திற்கு முன்னால் பா.ஜ.க என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள். அதிலும், கடந்த சில நாட்களாக வெங்கய்யா நாயுடு, நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல் என தலைவர்கள் அணிவகுத்தாலும், அவர்களின் கூட்டங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகையும் பெரிதாக எடுபடவில்லை.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசும்போது, " தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது. ஊழல் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சரை சந்திக்கவே முடியவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தால் ஊழல், மதுவுக்கு எதிரான நல்லாட்சி மலரும்" எனப் பேசுவது மீடியாக்களின் காதில் மட்டுமே விழுகிறது. பியூஸுக்கு எதிராக வெங்கய்யா நாயுடு, ' முதலமைச்சரை நான் சந்தித்தேன்' எனக் கூறிய கருத்தை, மேடைகள் தோறும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா. 'மோடி வருகிறார்' என பா.ஜ.க தலைவர் தமிழிசை நம்பிக்கையோடு சொல்ல, 'மோடி அலையெல்லாம் காணாமல் போய்விட்டது' என அதற்கும் எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு பேசுகின்றன. இந்நிலையில், வருகிற 6 ம் தேதியன்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேச வருகிறார் பிரதமர் மோடி. ' ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வழக்கம்போல காற்று வீச ஆரம்பித்துவிட்டால், கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்'  என பா.ஜ.க நிர்வாகிகள் பயப்படுகின்றனர். இதற்காக, அவர்கள் வகுத்திருக்கும் திட்டம் மலைக்க வைக்கிறது.

மோடி கூட்டத்திற்கு 300 ரூபாய்...! -கூட்டம் சேர்க்குமா பா.ஜ.க வியூகம்?

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,   " வேட்பாளர்களில் பலர் சொந்தக் காசைப் போட்டுத்தான் செலவு செய்கின்றனர். மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் செலவுக்காக வெறும் மூன்று லட்ச ரூபாய்தான் தலைமை கொடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களின் கூட்டங்களுக்கு பெரிய அளவில் கூட்டம் வராமல் போனதற்குக் காரணமே, பொதுமக்கள் தங்கள் சொந்தக்காசில் கூட்டத்திற்கு வந்ததுதான். ஆனால், மோடியின் கூட்டத்திற்கும் இதுபோல் சொற்ப கூட்டம் வந்தால் நன்றாக இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்குக் கூடிய லட்சக்கணக்கான கூட்டத்தின் பிரமிப்பிலேயே தலைமை இருக்கிறது. இந்தமுறை அப்படிக் கூட்டம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு கண்டிஷன், தி.மு.க, அ.தி.மு.க போல சரக்கு, சைட் டிஷ் எல்லாம் கிடையாது. தலைக்கு 300 ரூபாய் செலவிடப்படும். பொதுமக்கள் வந்து போவதற்கான வாகனம், ஒரு நேர உணவு, டீ பிஸ்கெட் என பக்காவாகத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தநாளில் கட்சியின் வாக்காளர்கள், பொதுமக்கள் யாரையும் வேலைக்குப் போக விடாமல் கூட்டத்திற்குக் கூட்டி வர வேண்டும் என்பதுதான் பிரதான திட்டம். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாற்பதாயிரம் பேர் வரையில் மோடியின் கூட்டத்தை ரசிக்கும் அளவுக்கு இருக்கைகள் போடப்படும். இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக மாற்றவும் திட்டமிட்டிருக்கிறோம். வெற்றியோ, தோல்வியோ மோடி கூட்டத்திற்கு பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி எங்கள் வலிமையைக் காட்ட இருக்கிறோம். மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மைதானத்தில் ஈ பறந்தால், அது எங்களுக்கு அவமானம் என்றே நினைக்கிறோம். இதற்காக, அமித் ஷாவின் சிறப்பு வழிகாட்டுதல்படியே தமிழக பா.ஜ.க தலைமை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார் அசராமல்.

மத்தியில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளுக்குள் தனித்துவிடப்பட்டும், கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் அளவுக்கும் பா.ஜ.க அலை சரிந்து போய்விட்டது. வழக்கம்போல, 'மோடி வந்த பிறகு பாருங்கள்' என தமிழக பா.ஜ.க தலைவர்கள் சவால்விடாமல் இருந்தால் சரி...!

-ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு