Published:Updated:

நான் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா? -விஜயகாந்த்

நான் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா? -விஜயகாந்த்
நான் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா? -விஜயகாந்த்

நான் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா? -விஜயகாந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர்: நான் முதல்வரானால், ஒரு எம்.எல்.ஏ. முதல் கையெழுத்து எதற்குப் போடுவாரோ அதற்காகத்தான் போடுவேன் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''பொய்யின் மறு உருவம் தான் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள சாலைகள் முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தாங்கள் அமைத்துள்ள உளவுத் துறை அறிக்கையை எதிர்பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஆனால், நான் மக்கள் மனநிலையைப் பார்த்து மட்டுமே முடிவுகளை எடுக்கிறேன். அதனால்தான், வரும் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணிக்கு 120 முதல் 150 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளி வருகின்றன.

நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, நீங்கள் முதல்வரானால் முதல் கையெழுத்து எதற்காகப் போடுவீர்கள் என என்னிட்டம் பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை கூறுகிறேன், ஒரு எம்.எல்.ஏ. முதல் கையெழுத்து எதற்குப் போடுவாரோ அதற்காகத்தான் போடுவேன்.

தமிழகத்தை தலை நிமிர வைக்கப் போவதாக ஜெயலலிதா கூறுகிறார் முதலில் உங்கள் தொண்டர்களையும், அ.தி.மு.க. வேட்பாளர்களையும் தலை நிமிர வையுங்கள். அதன்பின் தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கலாம். கடந்த 5 ஆண்டுகளாக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் எல்லாம் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாரா? தமிழ்நாட்டில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்அதனால், ஆறுமுகம் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு