Published:Updated:

சோனியாவை புறக்கணித்த சிதம்பரம்...! -கோஷ்டி மோதலின் உச்சகட்டம்

சோனியாவை புறக்கணித்த சிதம்பரம்...! -கோஷ்டி மோதலின் உச்சகட்டம்
சோனியாவை புறக்கணித்த சிதம்பரம்...! -கோஷ்டி மோதலின் உச்சகட்டம்

சோனியாவை புறக்கணித்த சிதம்பரம்...! -கோஷ்டி மோதலின் உச்சகட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, தீவுத்திடலில் தி.மு.க, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வருகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. 'தனக்கு முக்கியத்துவம் தராமல் எங்கெல்லாம் நடப்பதால் இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்க மாட்டார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என எதிலும் சிதம்பரத்தை அணுகாமல் இளங்கோவனே நின்று காரியம் சாதித்தார். சிதம்பரத்தின் ஆதரவாளர்களுக்கு ஓரிரு சீட் மட்டும் கொடுத்துவிட்டு, பதினைந்துக்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு சீட் ஒதுக்கினார் இளங்கோவன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து சோனியாவின் கவனத்திற்கு சிதம்பரம் கொண்டு சென்றார். அதற்கு எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்கவில்லை. 'தனக்குரிய மரியாதையை தலைமை உறுதி செய்யவில்லை' என்ற கோபத்தில் இருந்தார் சிதம்பரம். காரைக்குடியில் தன்னுடைய ஆதரவாளர் ராமசாமிக்கும் மயிலாப்பூர் கராத்தே தியாகராஜனுக்கும் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு ஒதுங்கிவிட்டார்.

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர், " 2006 தேர்தலில் தி.மு.க வெற்றி பெறுவதற்கு சிதம்பரத்தின் பிரசாரமும் ஒரு காரணம். 'தி.மு.கவின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்' என அவர் பேசிய பேச்சு, வெகுவாகப் பிரபலம் அடைந்தது. தி.மு.க தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இந்தமுறை தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருக்கிறது. கல்விக்கடன் ரத்து என்பது சிதம்பரத்திற்கு மிகவும் விருப்பமான ஒன்று. அவர் நிதியமைச்சராக இருந்தபோது, கல்விக்கடனை பரவலாக வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். கல்விக் கடன் ரத்தினால் வரக்கூடிய பலன் என்ன? என்பது மற்றவர்களைவிட, பொருளாதார அறிஞரான சிதம்பரத்திற்கு நன்றாகவே தெரியும். இதைப் பற்றி அவர் பிரசாரத்தில் பேசினால் எடுபடும். ஆனால், தி.மு.க தலைமை அவரை அழைக்கவில்லை.

அவர்கள் அழைக்காதபோது, 'நாம் ஏன் வலுக்கட்டாயமாக போய் பிரசாரம் செய்ய வேண்டும்?' என நினைக்கிறார் சிதம்பரம்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை சென்றபோது, தி.மு.க வேட்பாளர்கள் சிலர் அவரை அணுகி, 'பிரசாரம் செய்ய வர வேண்டும்' என அழைப்புவிடுத்தனர். அதை ஏற்று, இன்று புதுக்கோட்டை ஆலங்குடி தி.மு.க வேட்பாளர் மெய்யநாதனுக்கு பிரசாரம் செய்யச் செல்கிறார் சிதம்பரம். இது ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். இளங்கோவன் இருக்கும் மேடையில் ஏறுவதற்கு அவர் விரும்பவில்லை. அகில இந்திய தலைமைக்கு இதை உணர்த்தவே சிவகங்கைக்கு வந்துவிட்டார் சிதம்பரம்" என்றார் விரிவாக.
 
" ஆலங்குடியில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது சிதம்பரம் முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று. குலவாய்ப்பட்டியில் 5 மணிக்கும், வல்லதீரக்கோட்டையில் 6 மணிக்கும் பிரசாரம் செய்கிறார். இறுதியாக, கொத்தமங்கலத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதைப் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதியும் வாங்கிவிட்டார். 'கட்சியின் சீனியர்கள் தேர்தல் பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்' என்றுதான் அகில இந்தியத் தலைமை வலியுறுத்தியிருக்கிறது. தலைவர்களின் பொதுக் கூட்டத்தைவிடவும் வேட்பாளர்களின் வெற்றி பிரதானமாக இருப்பதால் சிதம்பரம் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறார். இதற்கு வேறுவிதமான காரணங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை" என்கிறார் சத்யமூர்த்திபவன் நிர்வாகி ஒருவர்.

அகில இந்தியத் தலைமை வருகையை புறக்கணிப்பதன் மூலம், இளங்கோவன் மீதான அதிருப்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறார் சிதம்பரம். 'இதற்கெல்லாம் ராகுல்காந்தி செவிசாய்க்க மாட்டார்' என்ற குரலும் சேர்ந்தே எழும்புகிறது.
 


ஆ.விஜயானந்த்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு