Published:Updated:

தேர்தல் நேரத்தில் மட்டுமே தொடர்பு எல்லையில் இருப்பவர் ஜெ.: தமிழிசை தாக்கு!

சென்னை: தேர்தல் நேரத்தில் மட்டும்தான் முதல்வர் ஜெயலலிதா மக்கள் தொடர்பு எல்லையில் இருப்பார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

வரும் 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாளை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழக மக்கள் தற்போது பெற்றிருக்கும் வசதிகளைவிட இன்னும் அதிகமான வசதிகளை பெற தகுதியுடையவர்கள். ஆனால் மற்ற கட்சி இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடி நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்திருந்தால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின்போதே செய்திருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த ஜெயலலிதா, தற்போது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் தொடர்பு எல்லையில் இருந்து கொண்டு இனிமேல் மக்களுக்கான திட்டங்களை செய்வேன் என்று சொன்னால் அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

எவ்வளவு காலம் தாமதமாக வெளியிட்டாலும், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களிடையே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. இருப்பினும், மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு திட்டங்கள் இருக்கும் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு