Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

யற்கைச் செல்வங்களும் பாரம்பரியச் செழுமைகளும் குவிந்துகிடக்கும் இந்திய தேசத்தில் இருந்து, 'கோகினூர்' வைரம் உள்பட அந்நியர்கள் கொள்ளைகொண்ட பொக்கிஷங்கள் எத்தனையோ..! அந்த வரிசையில் சமீப காலமாக, 'காப்புரிமை' என்ற பெயரில் தொடரும் கொள்ளை - கொடுமையிலும் கொடுமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்கத்தியக் கலாசார மயக்கத்தில் நம்மவர்கள் ஆழ்ந்துகிடக்க... வெளிநாட்டுக்காரர்கள் 'விழிப்போடு' வேலை பார்க்கிறார்கள். வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி போன்றவற்றுக்கு அமெரிக்கா சத்தம் இல்லாமல் 'காப்புரிமை' வாங்கிவிட... தாமதமாக விழித்துக்கொண்டு, அடித்துப் பிடித்துப் போராடி, அதைத் திரும்பப் பெற்றோம். கீழாநெல்லி, நித்தியக் கல்யாணி போன்ற மூலிகை உரிமைகளையும் அந்நிய சக்திகள் தங்கள் ஏகபோக வியாபாரத்துக்கு உள்ளாக்கப் பார்த்தன. நல்லவேளையாக, முன்கூட்டி மோப்பம் பிடித்து, காப்புரிமையாகக் காப்பாற்றிக்கொண்டோம். இப்போது வந்திருப்பது இன்னொரு இடி!

'இந்தியா ஒரு விவசாய நாடு' என்று பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்துக்கொண்டு, மெள்ள விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கும் நாம், கம்பீரம் மிகுந்த ஓங்கோல் மாடுகளுக்கும் காப்புரிமையைக் கோட்டை விடும் நிலையில் இருக்கிறோம்!

இந்த அரிய கால்நடைச் செல்வத்தின் உயிர் அணுக்களைக் கடத்திச் சென்று, புதிய கலப்பின மாடுகளை உருவாக்கி, அந்த மாடுகளை கோடிக்கணக்கான டாலருக்கு வெளிநாடுகளில் விற்கிறார்கள் என்கிற செய்தி அதிரவைக்கிறது! பலமான நோய் எதிர்ப்புச் சக்தியும், கடுமையான உடல் உழைப்பும்கொண்ட ஓங்கோல் இனம்தான் தென்னிந்தியக் கோயில்களில் திமில் நிமிர்த்திக் காட்சி தரும் 'நந்தி'யின் மூல வடிவங்கள். இந்த கம்பீரக் காளை இனத்தின் மதிப்பு இது வரை நம் அரசுக்குப் புரியாமல் போனது ஏன்?  

இனியும், அந்நியர் உரிமை கொண்டாட முடியாதபடி சட்டப் பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷங்கள்பற்றி முழுமையான தகவல் சேகரிப்பில் எப்போது நாம் இறங்கப்போகிறோம்? கடல் கடந்து போன கறுப்புப் பணத்தை மீட்டு வரத்தான் துப்பில்லை. நம் பாரம்பரியச் சொத்துகளையும் பறிகொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தால், மன்னிப்பே கிடையாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism