Published:Updated:

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது:பரபரப்புத் தகவல்கள்!

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது:பரபரப்புத் தகவல்கள்!
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது:பரபரப்புத் தகவல்கள்!

சென்னை: 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை மணிக்குத் தொடங்கியது.கடந்த 16ம் தேதி தேர்தல் நடைபெற்ற, தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிமுக,திமுக,தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கூடியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.