Published:Updated:

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜெயலலிதா வழக்கு!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜெயலலிதா வழக்கு!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜெயலலிதா வழக்கு!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கவோன் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக கூறி, அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இளங்கோவன் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெகன் நீதிமன்றத்தில் தாக்க செய்துள்ள மனுவில், ‘கடந்த மாதம் 30-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டியில், ‘துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கூறி, தமிழக கவர்னர் ரோசய்யா, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது.

வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறான குற்றச்சாட்டுகளை கவர்னர் மற்றும் முதல்வர் மீது அவர் சுமத்தியுள்ளார். அதனால், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமின்ல அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக ஆளுநர் ரோசய்யாவை அவதூறாக விமர்சித்தது தொடர்பாக இளங்கோவன் மீது மே 11 ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.