Published:Updated:

அந்த 5 முதல்வர்கள் யார்? காத்திருக்கும் இந்திய மாநிலங்கள்!

அந்த 5 முதல்வர்கள் யார்? காத்திருக்கும் இந்திய மாநிலங்கள்!
அந்த 5 முதல்வர்கள் யார்? காத்திருக்கும் இந்திய மாநிலங்கள்!

சென்னை: தமிழகம்,கேரளம்,புதுவை,அஸ்ஸாம்,மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று(வியாழன்) வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் அடுத்த ஆளும் கட்சியாக  எந்தக் கட்சி தேர்வு செய்யப்படும்  என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகம்,புதுச்சேரி,கேரளம்,ஆகிய 3 மாநிலங்களில் கடந்த 16 ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.அஸ்ஸாமில் 2 கட்டமாகவும்,மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டமாகவும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழகத்தில், வாக்கு எண்ணிக்கை பணியில் 9,621 பேரும்,வாக்குப் பதிவு விவரங்களை கண்காணிக்கும் பணியில் 3,971 நுண் பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.