Published:Updated:

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு!

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு!
ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு!
ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு!

ரத்தநாடு தொகுதியில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 4410 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 22 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் 4410 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் அவரை விட கூடதலாக 22 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.