Published:Updated:

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக
கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக
கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக

 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில், முதலில் தி.மு.க முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் அ.தி.மு.க முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும் சமநிலையில் முன்னிலை வகித்து வந்தது.


வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து அ.தி.மு.க முன்னிலையில் இருந்தது. தி.மு.க பின்னடவை சந்தித்தது. இதன் முடிவில் அ.தி.மு.க 132 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ம.க 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் தோல்வி அடைந்ததோடு, 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக

ஜெயலலிதா அறிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அ.தி.மு.க வெற்றி உறுதியாகியது. இதனை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் காலை முதலே போயஸ் கார்டன் முன்பும், ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமை அலுவலம் முன்பும் குவிந்தனர்.

அ.தி.மு.க வெற்றி முகம் தெரிந்தவுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக

ஏற்கனவே வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த அ.தி.மு.க தொண்டர்கள், ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்தவுடன் மேலும் குதூகலம் அடைந்தனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் ஆடல், பாடல்களுடன், பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

- படங்கள்: ஆ.முத்துக்குமார், பா.காளிமுத்து