Published:Updated:

தேர்தல் ஸ்லோகன்களில் எது ஜெயித்தது...?

தேர்தல் ஸ்லோகன்களில் எது ஜெயித்தது...?
தேர்தல் ஸ்லோகன்களில் எது ஜெயித்தது...?
தேர்தல் ஸ்லோகன்களில் எது ஜெயித்தது...?

ரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. இன்னும் சில மணிநேரங்களில் யார் யார் வெற்றி  பெற்றார்கள் என்பதும் தெளிவாக தெரிந்துவிடும்.  இத்தருணத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் என்னென்ன சொன்னார்கள் என்பது குறித்த ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு இது...

ஏப்ரல் 9 ம் தேதி தேர்தல் பிரசாரத்தை துவங்கிய ஜெயலலிதா,  பெரும்பாலும் அனைத்து பிரசார கூட்டங்களிலும்  “தனது குழந்தைக்கு என்ன வேண்டுமென்று ஒரு தாய்க்குதான் தெரியும்...” என்றார்.

ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் பிரசாரத்தை துவங்கிய கருணாநிதி, அண்மையில் ஒரு தேசிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,  “ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியின் மீது விருப்பம் இல்லை. அவர் திமுக தலைவரே (கருணாநிதி) முதல்வர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.” எனக் கூறியிருந்தார்.

தேர்தல் ஸ்லோகன்களில் எது ஜெயித்தது...?

நமக்கு நாமே என்ற நடைபயணத்தை துவங்கிய காலத்திலிருந்தே ஸ்டாலின், “ திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்று 'C' க்கள் இருக்காது. அவை Commission, Collection, and Corruption.” என்றார்.

விஜயகாந்த் ஒரு தேசிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,  “நான் ஹீரோ, கலைஞர் வில்லன்; ஜெயலலிதா வில்லி.” எனக் கூறி இருந்தார்.

தேர்தல் களேபரங்களிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்த அழகிரி, ” திமுகவுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது." என சொல்லி இருந்தார்.

மக்கள் நலக் கூட்டணி என்று, திமுக அதிமுக இல்லாத ஒரு அணியை கட்டமைத்த வைகோ,  “எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால், மீண்டும் திமுக, அதிமுகவிடம் இரண்டு மூன்று தொகுதிகளுக்காக சேர வேண்டிய நிலை ஏற்படும்.” எனக் கூறி இருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தில் தனித்து நின்ற அன்புமணி,  “உங்கள் ஊர் உங்கள் மணி. ஆக்டர் ஆட்சி வேணுமா...டாக்டர் ஆட்சி வேணுமா..?” என்ற வாக்கியத்தைதான் அதிகம் பயன்படுத்தினார்.

தமிழ் தேசிய கருத்தியலை தூக்கிப்பிடித்து, வாக்கு சேகரித்த சீமான் , “போட்டு பாருங்க ஓட்டை, அப்புறம் பாருங்க நாட்டை...!” என்று முழங்கினார்.

- மு. நியாஸ் அகமது