Published:Updated:

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி
ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி
ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி



ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்திலிங்கம், திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வியை தழுவினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சில தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்திலிங்கமும், திமுக சார்பில் ராமச்சந்திரனும் போட்டியிட்டனர். தொடக்க முதலே வைத்திலிங்கம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார். ராமச்சந்திரன் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்து வந்தார்.

அனைத்து சுற்றுகள் முடிவில் அமைச்சர் வைத்திலிங்கம் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார்.

சங்ககிரி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரனை 37,777 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜா தோற்படித்துள்ளார்.