Published:Updated:

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

Published:Updated:

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

தேர்தல் கமிஷனா...தில்லுமுல்லு கமிஷனா? கருணாநிதி ஆவேசம்!

சென்னை: தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு  செய்யும் கமிஷனா என்று திமுக தலைவர் கருணாநிதி,தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கொந்தளித்துள்ளார். அண்மையில் நடந்த தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி,தள்ளிவைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர்,அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல் நிலவரம் வரை தமிழகத்தில்  தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருகிறது என்று எதிர்க் கட்சிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் கருணாநிதி கேள்விமேல் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரின் அறிக்கையில்,

" ஒரு தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா? முதலமைச்சர் காலிலே விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா? இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும்.

சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர். இதுபற்றி தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்தால் கூட பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
தமிழகம் முழுவதிலும் அத்தனை தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என்று தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.

தற்போது அதையும் தாண்டி ஏதோ பா.ஜ.க., பா.ம.க., நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதி களிலும் 3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்? இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா பற்றி விசாரிக்க மூன்று வாரங்கள் தேவையா? அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய கட்சிகளின் கருத்துக்களை அறிந்திட வேண்டாமா? பா.ம.க., வும், பா.ஜ.க.வும் நீதி மன்றத்தில் மனு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில் வழக்கு தொடுத்தார்கள்? அதற்காக இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா? இவைகள் எல்லாம் யாரை ஏமாற்று கின்ற காரியம்? இதற்காகவா ஒரு தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா? முதலமைச்சர் காலிலே விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா? இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக்காது, நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.