Published:Updated:

உ.பி.யில் உள் ஒதுக்கீடு: காங். விளம்பரத்துக்கு தடை

உ.பி.யில் உள் ஒதுக்கீடு: காங். விளம்பரத்துக்கு தடை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில், சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றிய காங்கிரஸ் கட்சியின் விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

முஸ்லிம் வாக்காளர்களை திரளாகக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், அவர்களின் ஓட்டுகளைக் குறிவைத்து,

உத்தர பிரதேச தேர்தலையொட்டி, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது, கிராம மக்களை கவர்கிற விதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டம் நிறைவேற்றியது பற்றி விளம்பர ஆடியோக்களையும், வீடியோக்களையும் காங்கிரஸ் கட்சி தயாரித்தது.

இந்த விளம்பர பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை காங்கிரஸ் கட்சி கோரி இருந்தது. அவற்றை ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பி வைத்தது. அவை ஆய்வு செய்யப்பட்டன.

இறுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி குறித்த விளம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது பற்றிய விளம்பரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
முன்னதாக, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்குமாறு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்காக பிரசாரம் செய்தபோது, இஸ்லாமியர்களுக்கான உள்ஒதுக்கீடு இரு மடங்காக உயர்த்தப்படும் என கூறி சர்ச்சையில் சிக்கியதும் நினைவுகூரத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு