Published:Updated:

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

Published:Updated:

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

ரூ.570 கோடி பிடிபட்டதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? -கருணாநிதி கேள்வி

சென்னை: திருப்பூர் அருகே பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறாரே?

கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்டபோது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் 'தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளனர்.

அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்னை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்' என்று பினராயி விஜயன் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் கடிதங்கள் எழுதியவன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆலோசனைப்படியும் கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்ற முறையிலும், முல்லைப் பெரியாறு பிரச்னையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றவன் என்ற முறையிலும், இதை நல்ல முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டவன் என்ற முறையிலும் இதை நான் கூறுகிறேன்.

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி..?

இந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, நான் தகவல் வெளிவந்த 28-5-2016 அன்றே விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். இப்படித் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுவது இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகளின்போது பல்வேறு இடங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது. இந்த அளவுக்குக் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று அப்போதும் சொல்லப்பட்டது.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை யார் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அவர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி எடுத்த நடவடிக்கை என்ன? பணம் வைத்திருந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையாவது பதிவு செய்யப்பட்டதா? பணம் வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா? தகுந்த புலன் விசாரணைக்குப் பிறகு, உரிய நீதிமன்றத்திற்கு வழக்குகள் எடுத்துச் செல்லப்படுவதில் ஏன் இந்தத் தாமதம்? அ.தி.மு.க.வின் மூன்று அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவர்களுக்கு எல்லாமுமாகச் செயல்பட்டவருமான கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டிலிருந்தும், குடோனிலிருந்தும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி பல கோடி ரூபாய் மற்றும் வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்கள், கண்காணிப்புக் காமரா போன்றவை கைப்பற்றப்பட்ட நிகழ்வில் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?

அ.தி.மு.க.வின் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு நெருக்கமான ஒருவரின் சென்னை அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியதே! அந்த நிகழ்வில் இதுவரை சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை என்ன? கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு திருப்பூருக்கருகில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் விபரங்கள் என்ன? இந்த விபரங்களையெல்லாம் வெளிப்படையாகத் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டாமா? அமைச்சர்களைப் போன்ற 'பெரிய இடங்கள்' சம்பந்தப்பட்டிருப்பதால், ஆறப் போட்டு மூடி மறைத்திட முயற்சிகள் நடப்பதாக விபரமறிந்தவர்கள் வேதனைப்படுகிறார்களே.

ரத்து செய்யப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன், இந்த நிகழ்வுகளில் தேர்தல் ஆணையம் சட்டப்படி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொன்னால் தானே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பெருமளவுக்கு நடந்த பண விநியோகம் தான் தேர்தலை ரத்து செய்யக் காரணம்; வேறு யாருக்கும் அனுசரணையாகவோ, உதவுவதற்கோ இந்த முடிவு மேற்கொள்ளப் படவில்லை, ஓட்டுக்குப் பணம் என்பதை எப்படியும் தடுத்தே தீருவோம் என்பனவற்றின் மீது உண்மையில் எல்லோருக்கும் நம்பகத்தன்மை ஏற்பட முடியும். முதல் முறை, முதல் முறை என்று சொல்லிக் கொள்வதற்கும் அப்போதுதானே பொருள் இருக்கும்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவிகித தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்களே?

காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட மொத்தம் 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; அதுவே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கக் காரணமாகி விட்டது. எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தி.மு.க.வுக்குப் பேரிழப்பாக முடிந்து விடுகிறது என்று தி.மு.க. செயல்வீரர்கள் விவாதித்துக் கவலை கொண்டிருப்பதாக, ஒரு சில நாளேடுகளும், ஊடகங்களும் கருத்து தெரிவித்து கலக விதை ஊன்றி வருகின்றன.

ஆங்கில நாளேடுக்கு நான் அளித்த பேட்டியில், 'தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன; இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்டணிக் கட்சிகளை நான் சிறிதும் குறை கூற விரும்பவில்லை. அந்தத் தொகுதிகளில் தி.மு.க. உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச்செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்' என்று நான் சொன்னதை மறைத்து, தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப்பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த 'சேவை'யில் மத்திய அரசின் உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை ஆங்காங்கே ஊன்றி வருவதாகவும் எனக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய நோக்கமெல்லாம், தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை உருவாக்கி, ஊதிப்பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில் தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட வேண்டும். அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர லாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பது தான். இதனைத் தி.மு.க.வின் தொண்டர்களும், கூட்டணிக்கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.