Published:Updated:

ஒத்துக்கமுடியாது, கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து போடுங்க; மறுதேர்தல் கேட்கும் பாமக வேட்பாளர்!

Vikatan Correspondent
ஒத்துக்கமுடியாது, கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து போடுங்க; மறுதேர்தல் கேட்கும் பாமக வேட்பாளர்!
ஒத்துக்கமுடியாது, கோட்டை அழிச்சிட்டு முதல்ல இருந்து போடுங்க; மறுதேர்தல் கேட்கும் பாமக வேட்பாளர்!

விழுப்புரம்:  உளுந்தூர்பேட்டை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாகக் கூறி அந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என பாமக வழக்கறிஞர் பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர் வழக்கறிஞர் பாலு. தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க  உளுந்துார்பேட்டைக்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், 'தேர்தலில் நான் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன்.  அதிமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்தார். இதுகுறித்து தொகுதி மக்களுடன் சென்று தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் தேர்தல் அதிகாரிகள் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் அளித்த என் மீதே தேர்தல் அதிகாரிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் அனைத்திற்கும் என்னிடம் உரிய ஆதாரங்கள் உள்ளன. முக்கிய ஆதாரங்களுடன் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததால்தான் நான் வெற்றி வாய்ப்பினை இழந்தேன். இதற்கான நீதிமன்றத்தின் மூலம் உரிய நியாயத்தை பெறுவேன்.

எனக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இடைத்தேர்தலை நிச்சயம் கொண்டு வர முடியும். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தை டெபாசிட் இழக்க வைத்து தோல்வி அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்தது போல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நடந்த தேர்தலையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும்” என்றார் ஆவேசமாக.

- ஜெ.முருகன்