Published:Updated:

மிருகங்கள், செடிகளை வதைப்பதைக் கண்டால் பொங்கி எழுவோம்... சுற்றுச்சூழலை காப்போம்!

மிருகங்கள், செடிகளை வதைப்பதைக் கண்டால் பொங்கி எழுவோம்... சுற்றுச்சூழலை காப்போம்!
மிருகங்கள், செடிகளை வதைப்பதைக் கண்டால் பொங்கி எழுவோம்... சுற்றுச்சூழலை காப்போம்!

மிருகங்கள், செடிகளை வதைப்பதைக் கண்டால் பொங்கி எழுவோம்... சுற்றுச்சூழலை காப்போம்!

லகம் வேறு சுற்றுச்சூழல் வேறு இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. உலகம் நிலைக்க சுற்றுச்சூழல் வேண்டும். உலகம் செம்மையாக இருக்க சுற்றுச்சூழல் அத்தியாவசியம். சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்த, நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். இன்று உலக சுற்றுச்சூழல் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா ஒவ்வொரு தீம்-ஐ மையப்படுத்தி இத்தினத்தை கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டின் 'Seven Billion Dreams; One Planet; Consume with Care' என்ற தீம்-ஐ மையப்படுத்தியது. இதன் அர்த்தம், உலகில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் கனவு இருக்கும். அனைத்து கனவுகளையும் நிறைவேற்ற ஒரே ஒரு தளம்தான் உள்ளது. அதுதான் நம் பூமி. ஆகையால், அதைப் பத்திரமாக காக்க வேண்டும் என்பதே.

அதேபோல், இந்த ஆண்டு 'fight against the illegal trade in wildlife' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அதாவது, சட்டவிரோதமாக மிருகங்களைக் கடத்துவதை தடுக்க வேண்டும். இந்த தீம்-ஐ எடுக்க பல காரணங்கள் உள்ளன. உலகில் அதிகரித்து வரும் இந்த வியாபாரத்தால் பல மிருக இனங்கள் அழிந்து விட்டன. மேலும், இப்படி சட்டவிரோதமாக வியாபாரம் செய்வது நம் நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழல் வளத்தையும் சுரண்டுகிறது. அதுமடுமில்லாமல், ஊழலையும், வறுமையையும் வளர்க்கிறது.

இப்படி சட்டவிரோதமாக மிருகங்களைக் கொல்வதால், வனவிலங்குகள் இனத்திற்கே ஆபத்து ஏற்பட்டுவிட்டது. யானைகள், காண்டாமிருகங்கள், புலிகள், கொரில்லா மற்றும் கடலாமைகள் ஆகியன அழியும் விளிம்பில் உள்ளன. 2011-ல், Jhava Rhinoவின் உப வகையான ஒருவித விலங்கினமே அழிந்து போய்விட்டது! மேலும், கடைசியாக எஞ்சியிருந்த western black rhinos காமெரூனில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டன. Gambia, Burkina Faso, Benin, Togo மற்றும் இன்னும் பல நாடுகளில் மனிதக் குரங்குகளின் இனமே இல்லை! இதுதவிர, நம் யாருக்கும் தெரியாத helmeted hornbills மற்றும் pangolins போன்றவையும் அழிந்துவிட்டன. நாம் வன உயிரினங்கள் பட்டியலில், மிருகங்களை மட்டுமே கவனிக்கிறோம். ஆனால், wild orchids மற்றும் Rosewood போன்ற செடி மர வகைகளும் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது!

சட்ட விரோதமான இப்படிப்பட்ட வியாபாரங்களைத் தடுக்க நிறைய திட்டங்கள், விழிப்பு உணர்வு முகாம்கள், தீவிர நடவடிக்கைகள் ஆகியன ஓரளவு உதவியுள்ளது. இருப்பினும், இவ்வுலகில் லட்சக்கணக்கான உயிர்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அவை அனைத்தையும் மீட்டுக் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் பொறுமையாக செயல்பட வேண்டும். இக்காலத்தில் எந்த தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது.

நாம் இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இப்படி, சட்டவிரோத செயலால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக, சூழல் சார்ந்த பாதிப்புகளை புரிய வைக்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்வில் வன மிருகங்களை வதைத்து வரும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது. அதாவது, யானைத் தந்தத்தால் செய்யப்படும் பொருட்களையோ, மயில் எண்ணை, புலி, மான் போன்றவற்றின் தோல்கள் ஆகியவையைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

இந்த ஆண்டிற்கான தீம், நம் அனைவரையும் விழிப்பு உணர்வுடன் இருக்கச் சொல்கிறது. அழிந்துகொண்டு வரும் மிருகங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவற்றைப் பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் வீட்டினருகே, நம் ஊரில் அழிந்து வரும் மிருகங்களையோ, செடிகளையோ பாதுகாப்பதில் இருந்து நம் அக்கறை தொடங்க வேண்டும். நாம் எங்கு இருந்தாலும், என்னதாக இருந்தாலும் சட்டவிரோதமாக மிருகங்களை வதைப்பதைக் கண்டால் பொங்கி எழ வேண்டும் என்பதே இந்த ஆண்டிற்கான தாரக மந்திரம்!

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு