Published:Updated:

கர்நாடக பேரவையில் ஆபாச படம்: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைச்சர்களாக இருந்த 3 பேர், பேரவைக் கூட்டத்தின்போது செல்ஃபோனில் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்‍கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, அப்போதைய அமைச்சர்கள்

சாவடி  சி.சி.பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலிமர் ஆகியோர் செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததை தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது. 

இதனையடுத்து எழுந்த சர்ச்சையால் 3 பேரும் தங்கள் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்‍கு உத்தரவிடும்படி, பெங்களூருவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்‍கை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்‍கு உத்தரவிட்டது.

மேலும், வருகிற 27-ம் தேதிக்‍குள் போலீஸார் தங்களது விசாரணை அறிக்‍கையை தாக்‍கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவு, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு