Published:Updated:

'நீயாவது வந்து எங்களைக் காப்பாற்று...!' - 'போக்கி மானிடம் அடைக்கலமான சிரியா சிறுவர்கள்

'நீயாவது வந்து எங்களைக் காப்பாற்று...!' - 'போக்கி மானிடம் அடைக்கலமான சிரியா சிறுவர்கள்
'நீயாவது வந்து எங்களைக் காப்பாற்று...!' - 'போக்கி மானிடம் அடைக்கலமான சிரியா சிறுவர்கள்

'நீயாவது வந்து எங்களைக் காப்பாற்று...!' - 'போக்கி மானிடம் அடைக்கலமான சிரியா சிறுவர்கள்

ந்தக் குழந்தைகள் இறுதியாக மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து விட்டன.  நிலா, சூரியன், நடசத்திரத்தைக் கடந்து, இந்த பால்வெளியில், ஏதாவது ஒரு மண்டலத்தில் இருந்து  வந்து, எந்த தூதராவது வந்து நம்மை காப்பார்கள் என்ற, அவர்களின் நம்பிக்கையும் மரித்துவிட்டது போல்தான் தெரிகிறது. ரத்தமும் சதையுமான மனிதர்களின் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள், இப்போது நம்பி இருப்பது ஒரு மொபைல் கேமின் கதாபாத்திரத்தை.

அவர்களின் கனவு இப்படியாகதான் சிதைந்தது...?

அந்த கதாநாயகன் யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்த குழந்தைகள் யார் என்று தெரிந்து  கொள்ளுங்கள். உள்நாட்டு போரினால் இதுவரை 250,00 பேர் இறந்து போயிருக்கும், ஐந்து லட்சம் பேருக்கு மேல் முடமாகி போயிருக்கும், ஐந்து லட்சம் பேருக்கு மேலானவர்கள் தாங்கள் நிம்மதியாக சுவாசிக்க ஒரு துண்டு நிலம் கிடைக்காதா என்று, 'அகதி' என்ற புது அடையாளத்துடன் அலைந்து கொண்டிருக்கும் சிரியா தேசத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

நம் குழந்தைகளுக்கு சில கனவுகள் இருக்கும்தானே... மருத்துவர் ஆக வேண்டும், பொறியாளர் ஆக வேண்டும், ஐஏஸ் ஆக வேண்டுமென்று... அது போலதான் சிரிய குழந்தைகளுக்கும் 2013 வரை ஒரு கனவு இருந்தது. ஆனால், அந்த நாட்டின் அதிபர் ஆசாத்தும், ஐஸ்ஐஸ் -ம் அவர்களின் அனைத்து கனவுகளையும் நிர்மூலம் ஆகிவிட்டார்கள்.

இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே கனவு ரசாயன குண்டுகளிலிருந்தும், பீரங்கி தாக்குதலில் இருந்தும் தப்பிக்க வேண்டுமென்பது மட்டும்தான். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால், நாளை விழிக்க வேண்டுமென்பது மட்டும்தான் அவர்களின் கனவு.

ஐ.நா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட்டன. பின் தங்களுக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டன. ரஷ்யா இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தால், நாங்கள் இதில் தலையிடமாட்டோமென்றது அமெரிக்கா. இவர்களின் இந்த ராஜதந்திர நகர்வில், மெல்ல அந்தக் குழந்தைகளின் ‘நாளை விழிக்க வேண்டும்’ என்ற  எளிய கனவும் மங்கத் துவங்கியது.

மனிதர்கள், அவர்களால் கட்டமைக்கப்பட்ட தேசங்கள் என அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்த அந்தக் குழந்தைகளிடம் இப்போது ஒரு ஏக்கம் தொக்கி நிற்கிறது. குறைந்தபட்சம் அந்த விளையாட்டின் ஊடாக உரையாடினாலாவது, உலக சமுதாயம் நம்மை கவனிக்காதா என்பதுதான் அந்த ஏக்கம்.

அந்த கேம்...?

\

பீடிகையெல்லாம் தேவையில்லை. இப்போது உலகத்தை கலக்கி கொண்டிருக்கும்  'Pokemon go' தான் அந்த கேம். அந்த விளையாட்டின் கதாப்பாத்திரத்தின் படங்களை ஏந்தி, 'நீயாவது வந்து எங்களை காப்பாற்று' என்ற வாசகத்துடன், அந்த நாட்டின் வெவ்வேறு நகரங்களில் வீதியில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
 
“நான், காஃபர் நபில். நான் இத்லிப் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறேன். தயவு செய்து என்னை வந்து காப்பாற்று' என்ற பதாகையுடன் நின்று கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். ஆசாத் அரசுக்கு எதிராக புரட்சி செய்து கொண்டிருக்கும் சிரியா புரட்சிப் படை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட இந்தப் படங்கள்,  சமூக ஊடகத்தில் பல லட்சம் பகிரப்பட்டு இருக்கின்றன.

இது குறித்து பேசிய, புரட்சிப் படையின் செய்தித் தொடர்பாளர், “சர்வதேச ஊடகங்கள் போக்கிமான் கோ பற்றிதான் எழுதி தீர்த்துக் கொண்டிருக்கின்றன. இதன் ஊடாக,  எங்களின் அவலத்தைப் பேசினால் உலக மக்களிடம் சிரிய மக்களின் அவலம் சென்றடையும் என்று நினைத்தோம்.” என்கிறார்.
 
இவர்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. பலர் இப்போது அந்த குழந்தைகளின் படங்களை பகிரத்துவங்கி இருக்கிறார்கள். பேசத் துவங்கி இருக்கிறார்கள்.

ஐலன் குர்தியும், போக்கி மானும்:

சென்ற ஆண்டும், இதுபோல ஒரு புகைப்படம்தான் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் குறித்து உலக மக்கள் பேச காரணமாக இருந்தது.

ஐலன் குர்தி. அடர் சிகப்பு பனியனும், நீல நிற கால் சராயும் அணிந்து இருந்த  அந்த மூன்று வயது சிறுவனின் சடலத்துடன், 12 சடலங்கள் துருக்கியப் படைகளால், துருக்கிக்கும், கிரேக்கத்திற்கும் இடையே உள்ள அகியன் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடம் தேடி ஓடியவர்கள்.

அந்த பிஞ்சுக் குழந்தையின் சடலம், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது. சமூக ஊடகத்தில் அந்த படம் அதிகமாக பகிரப்பட்டது,  பலர் அந்தப் படத்தை சுயவிவர படமாக வைத்துக் கொண்டார்கள். நாட்கள் நகர்ந்தன. ஐலன் குறித்த நினைவுகளும் மெல்ல மங்கத் துவங்கியது.  இப்போது 'போக்கி மான்' ஊடாக அந்தக் குழந்தைகள் உலக மக்களின் மனசாட்சியுடன் உரையாடுகிறார்கள்.

அமெரிக்க கவிஞர் ஈவ் மெரியம் ஒரு முறை சொன்னார், “நான் தாயாக விரும்புகிறேன். எப்போது என்றால், அந்தக் குழந்தைகள் போர் என்றால் என்னவென்று கேட்க வேண்டும். அத்தகைய சூழல் வர வேண்டும். அப்போதுதான் நான் தாயாக விரும்புகிறேன்.” என்றார். அவர் 1992 ம் ஆண்டு இறந்தும் போனார்.

ஆனால், போர் என்றால் என்னவென்று கேட்கும் சூழல்தான் இன்னும் வரவில்லை.

- மு. நியாஸ் அகமது
 
 

அடுத்த கட்டுரைக்கு