Published:Updated:

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'
சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

ஈரோடு: 'அடித்தவர்களிடமும், அடிவாங்கியவரிடமும்தான் அதைக் கேட்கவேண்டும்' என்று சசிகலா புஷ்பா விவகாரம் குறித்து ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பிற கட்சிகளிலிருந்து தொண்டர்கள் தி.மு.கவில் இணையும் விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது,  '' அரசியல் ஆதாயம் தேடிப் போகிறவர்கள் ஆளும் கட்சிக்குத்தான் போவார்கள். ஆனால், தமிழக மக்களுக்கான இயக்கம் தி.மு.க. என்பதால் தான் இன்றும் தி.மு.க.வில் பலர் இணைகிறார்கள்.

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

நான் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து, அவர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தேன். அதில் குறிப்பாக மாணவர்களிடம் கேட்டபோது, 'கல்விக்கடனை கட்ட வழியின்றி தவிக்கிறோம். இந்த நிலையில் வங்கியில் இருந்து வட்டி கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள்' என்றனர்.

இதை அப்படியே தலைவரிடம் சொன்னேன். அதன் எதிரொலியாகத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடனையே ரத்து செய்கிறோம் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது. ஆனால், சிறு விபத்துபோல் நாம் ஆட்சிக்கு வரவில்லை. இன்று கல்விக்கடன் நெருக்கடியால், ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இதை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை.

சசிகலா புஷ்பா விவகாரம்: ஸ்டாலின் 'பஞ்ச்'

நான் இங்கு வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தேன். எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். சசிகலா புஷ்பா பற்றி என்னிடம் கேட்டார்கள். 'அதுபற்றி அடித்தவர், அடிவாங்கியவரிடம் கேளுங்கள் என்றேன். காரணம், அடிவாங்கிய சசிகலா புஷ்பா, நடுரோட்டிலோ, முச்சந்தியிலோ நின்று கொண்டு சொல்லவில்லை. பத்திரிகையாளர்களிடம் சொல்லவில்லை. அவர் இருக்கும் மக்களவையின் நடுவில் நின்று சொல்லியிருக்கிறார். அதனால், இதுகுறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்றேன்” - இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

- வீ.மாணிக்கவாசகம்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அடுத்த கட்டுரைக்கு