Published:Updated:

சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கு: பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம்: சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிபதி கண்டிப்பு தெரிவித்ததோடு, அடுத்த விசாரணைக்கு கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற திமுக ஆட்சியின் போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை,  அவர்கள் இருவர் மீதும், கடந்த 2002-ம் வழக்கு பதிவு செய்தது. ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அனைத்து அரசுத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், இவ்வழக்கு நேற்று 3-ம் தேதி புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாலாட்சி மட்டும் நேரில் ஆஜரான நிலையில், பொன்முடி ஆஜராகவில்லை. 'சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அவர் பங்கேற்று இருப்பதால் அவரால் ஆஜராகமுடியவில்லை' என்று பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, “விழுப்புரத்தில் நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் பொன்முடி, நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராவதில்லை. நீதிமன்றப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனால், அடுத்த விசாரணைக்கு அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். என்று சொன்னதோடு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

- ஜெ.முருகன்
படங்கள்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு