Published:Updated:

'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி

'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி
'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி

'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி

சென்னை: ''தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்'' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று,  மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு இன்று பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, " 2007ல் அன்றைய முதல்வர் கருணாநிதி,  'தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது'  என்றார். 1971ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தமிழகத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டது. பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அதனை தளர்த்தியது திமுகதான். இந்த தகவல் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாது. அமைச்சர் அதை விளக்கித் கூற வேண்டும். முதல்வர் என்ற முறையில், மதுவிலக்கு குறித்து விளக்க வேண்டும் என அமைச்சருக்கு அறிவுரை கூறினேன்.

மதுவிலக்கு, கச்சத்தீவு பிரச்னை குறித்துப் பேசினால் எதிர்க்கட்சியினர் அவர்களாகவே வெளியேறி விடுகிறார்கள். சபாநாயகர் பணியை நான் மிகவும் எளிதாக்கிவிட்டேன். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். அதன் காரணமாகவே 500 கடைகள் மூடப்பட்டது. சில்லறை மதுபான விற்பனைக்கடைகளில் 2 மணி நேர விற்பனை நேரம் குறைக்கப்பட்டது" என்று கூறினார்.

இதனிடையே, முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், " சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். முதல்வர் பேச்சுக்கு பதில் அளிக்க அனுமதி கேட்டதற்கு, சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு  குறித்து நாள் முழுவதும் விவாதம் நடத்த திமுக தயார். ஆளுங்கட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா " என்று சவால் விடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு