Published:Updated:

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்
நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

ண்பர்கள் கூற கேட்டு இருக்கிறேன். “வட மாநிலங்களுக்கு செல்லும் போதெல்லாம், நான் மோசமான இனப்பாகுபாட்டை உணர்கிறேன். தமிழர்கள் என்பதால் நம்மை கிண்டல் செய்கிறார்கள். நம்மை எப்போதும் அங்கு வேறுபடுத்தி பார்க்கிறார்கள்... நம்மை மதராஸி, பாண்டி என்றே அழைக்கிறார்கள்” என்று டெல்லியில், புனேயில் தொழில் நிமித்தமாக வசிக்கும் பல நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் தமிழ்த் தேசியவாதிகள் அல்ல... இந்தியாவை நேசிப்பவர்கள்தான். இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில், ஏதேனும் ஒரு தேசியப் பேரிடர் என்றால், தங்களால் இயன்ற உதவிகளை செய்பவர்கள் தான். ஆனால், அவர்களே தாங்கள் இன அடிப்படையிலான பாகுபாட்டை எதிர் கொண்டதாக பகிர்ந்து இருக்கிறார்கள்.  ஏன் நீங்களும் கூட இது போன்ற பாகுபாட்டை,  தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது, தனிப்பட்ட முறையில் உணர்ந்து இருக்கக் கூடும் அல்லது கேள்விப்பட்டாவது இருக்ககூடும். நிச்சயம் அது துயரமானதுதான்.

'இது நம் நாடு, நமக்கான நாடு' என்று நம்பி, மனமகிழ்வோடு தேசத்திற்குள்ளேயே எல்லைகளை கடக்கும் போது, இது போன்ற பாகுபாட்டை எதிர்கொள்ள நேர்வது நம்மை காயப்படுத்தும்தான்.  ஆனால், அதே நேரம் நாம் இந்த விஷயத்தில் மிகச் சரியாக இருக்கிறோமா...?  உள்ளத்தில் கைவத்துச் சொல்லுங்கள்...' நம் எல்லைகளுக்குள் வந்தவர்களை நாம் காயப்படுத்தவில்லை, நாம் அவர்களை இனப் பாகுபாட்டால் அவர்களை கிண்டல் செய்யவில்லை' என்று.  நிச்சயம் நம்மில் பெரும்பாலானவர்கள் செய்து இருக்கிறோம். இனப் பாகுப்பாட்டால், மொழி பாகுபாட்டால் நாம் அறிந்தோ அறியாமலோ, நாம் பிற இனத்தவர்களை நகைத்திருக்கிறோம். அவர்களை காயப்படுத்தி இருக்கிறோம்.

இது ஒரு அஸ்ஸாம் பத்திரிகையாளரின் அனுபவம்:

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

அவர் பெயர் ரெஜினா குருங். ஹிமாலாய மலை அடிவாரத்தில் இருக்கும் டார்ஜீலிங்தான் அவரது சொந்த ஊர். பத்திரிகையாளாராக வேண்டும் என்பதுதான் அவரது நீண்ட நாள் கனவாக இருந்து இருக்கிறது. ஒரு நன்நாளில் அந்த கனவும் நனைவாகி இருக்கிறது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பணியில் சேர்ந்து இருக்கிறார்.  மிகவும் உற்சாகமாக பணியைத் துவங்கி இருக்கிறார். ஆனால், அந்த உற்சாகம் அதிக நாட்களுக்கு தொடரவில்லை. ஆம், தான் பணி நிமித்தமாக செல்லும் பல இடங்களில், இனப்பாகுபாட்டை  சந்தித்து இருக்கிறார். அண்மையில் சென்னைத் தீவு திடலில் நடந்த புத்தகக் கண்காட்சியில், எந்த இன, மொழி அரசியல் தெரியாத பிஞ்சு பிள்ளைகள் கூட, இவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்திருக்கிறார்கள்.  

தனது அனுபவங்களை ஒரு கட்டுரையாக, தான் பணி புரியும் அதே நாளிதழில் எழுதி இருக்கிறார்.  “சின்னக் குழந்தைகள் என்னை, என் உருவத்தை வைத்து ‘சிங்கி’, ‘சிங்-சாங்’ என்று அழைத்தார்கள். இப்போது மட்டுமல்ல என் சிறு வயதில், நான் சுற்றுலாவாக என் மாநிலத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு செல்லும் போது... என்னை 'சைனீஸ்' என்றே அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. நானும் ஜன கன மணதான் பாடுகிறேன்... தினமும் பள்ளியில் அனைத்து இந்தியர்களும் என் சகோதரர்கள் என்று உறுதி எடுத்துக் கொள்கிறேன்.  பின் ஏன் இந்தப் பாகுபாடு..?”

அண்மையில் கால் டாக்சியில் பயணித்து இருக்கிறார். டாக்ஸி டிரைவர், அவரை வீட்டு வாசலில் இறக்கி விடாமல் பாதியில் இறக்கிவிட்டு இருக்கிறார். இதை அவர் கேட்ட போது, அந்த டாக்ஸி டிரைவர், “போ.... நீ உங்க சீனாவிற்கே போ...” என்று உடைந்த ஆங்கிலத்தில் ரெஜினாவுடன் சண்டை போட்டு இருக்கிறார்.  இவரை உருவத்தை வைத்து,  சீனாப் பெண்ணாக மட்டும் இவர் அடையாளப்படுத்தப்படவில்லை. கொரியா, ஜப்பான், நேபாள பெண்ணாகவும்  அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ஆனால் இது எதற்கும் அவர் மக்களை குறைகூறவில்லை.  “ஆம், வடகிழக்கில் இருக்கும் எட்டு மாநிலங்களை இந்தியா கைவிட்டுவிட்டது. அவர்களும் நம்மவர்கள்தான் என்ற சிந்தனையை ஏற்படுத்த தவறிவிட்டது. இந்தியக் குழந்தைகள், 'வேற்றுமைகளில் ஒற்றுமை' என்று பயில்கிறார்கள், நம் தேசத்தின் வரைபடத்தை பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வடகிழக்கை சேர்ந்த ஒருவர் எப்படி இருப்பார் என்று தெரியவில்லை. அதனால்தான் என்னவோ, சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கழித்தும் எங்களை இந்தியர்களாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள்" என்று கூறும் ரெஜினா, இதற்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.

" கடந்த மாதம் அஸ்ஸாமில் பெய்த பெரும் மழையில், 26 பேர் இறந்து இருக்கிறார்கள்; 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிதாக எந்த செய்தியும் வெளியிடவில்லை.  மிகவும் சுருக்கமாக, ' அஸ்ஸாமில் மழையில் மனிதர்களுடன், காண்டாமிருகமும் இறந்துவிட்டன'  என்று செய்தி வெளியிட்டதுடன் நிறுத்திவிட்டன. ஆனால், குர்கானில் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து மிகப் பெரிய செய்தி வெளியிடப்படுகிறது. சமூக ஊடகங்களிலும் அது குறித்து மட்டும்தான் விவாதம்.

நாங்கள் எதிர்கொள்ளும் இந்த இனப்பாகுபாடு, நம் அமைப்பில் உள்ள தவறு.”  என்று மேலும் கூறுகிறார் அவர்.

நாம் பிற இனத்தவர்களை மதிக்கிறோமா...? கிண்டலுக்குள்ளான வடகிழக்கு பெண்

நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வோம்:

அவர் பகிர்ந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மிகச் சரியானதுதானே.  அரசின் மீது தவறு இருக்கிறதுதான். அவர்கள் இன, மொழி தாண்டி மக்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த, ஒரு மாநிலத்தவரின் கலாசாரத்தை இன்னொரு மாநிலத்தவர் புரிந்து கொள்ள, சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் அரசு எதுவும் செய்யவில்லைதான். ஆனால், அரசின் மீது மட்டும்தான் அனைத்து தவறுகளுமா...?

பிஞ்சு குழந்தைகள் ‘சிங்கி’, ‘சிங் சாங்’ என்று அழைக்கும் அளவிற்கு, அவர்கள் மனதில் நஞ்சை விதைத்தது யார்...? தெலுங்கு மொழி பேசுபவர்களை கண்டால் ‘கொல்ட்டி’ என்று அழைக்க சொல்லிக் கொடுத்தது யார்...?  நிச்சயம்... இதை அவர்களாக கற்றுக் கொள்ளவில்லை. சீழ்ப் பிடித்த நம் புரிதல்கள்தான் அவர்களிடம் கடத்தப்பட்டு இருக்கிறது.

நாம் ஆயிரத்தெட்டு அரசியலை நம்பலாம். ஆனால், பிற இனத்தவர்களை கிண்டல் செய்துகொண்டே...  ‘அய்யோ... பிற மாநிலம் சென்றால்... எங்களை கிண்டல் செய்கிறார்கள்... பாண்டி என்று கிண்டல் செய்கிறார்ககள்’ என்று கண்ணீர் வடிப்பது அல்லது கோபப்படுவது எத்தகைய அறம்...?

நாம் பாகுபாட்டிற்கு உள்ளாகக் கூடாது என்று விரும்புகிறோமென்றால், நாம் முதலில் இன, மொழிப் பாகுபாட்டால் பிறரை சிறுமைப்படுத்தக் கூடாது. இதை செய்யாமல் நம் நியாயங்களை மட்டும் முன்னிறுத்துவது அறமற்ற அரசியலன்றி வேறொன்றும் இல்லை...!

- மு. நியாஸ் அகமது | ஓவியம் : பிரேம் டாவின்ஸி

அடுத்த கட்டுரைக்கு