Published:Updated:

வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: பிரபல தமிழ்த் திரைக்கதை ஆசிரியரும் இயக்குநரும் நடிகருமான 'வியட்நாம் வீடு' சுந்தரம் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

" பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், இயக்குநரும், நடிகருமான திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் இன்று அதிகாலை (6.8.2016) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் ஆவார். 1970-ஆம் ஆண்டு “வியட்நாம் வீடு” என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “நான் ஏன் பிறந்தேன்”, “நாளை நமதே” ஆகிய படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக இருந்ததோடு, பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் குடும்பப்பாங்கான கதைகளை இயக்குவதில் வல்லவர்.

திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் “வியட்நாம் வீடு” திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது, அறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகளைப்  பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும்.

திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு